\
Man Fired After Laptop Location Reveals Work From Singapore
கோப்புபடம்AI

"Work From Home" சொல்லிவிட்டு, வெளிநாடு பயணம்.. லேப்டாப் மூலம் சிக்கிய ஊழியர்! அடுத்து நடந்தது என்ன?

வீட்டிலிருந்து வேலை செய்வதாகக் கூறிவிட்டு, வெளிநாட்டில் தங்கியிருந்த ஊழியர் ஒருவர், தனது லேப்டாப்பின் இருப்பிடம் மூலம் சிக்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
Published on: 

ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த சார்லஸ் கிரஹாம் (Charles Graham), நாணயப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். சுமார் 20 மாதங்களாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், சிங்கப்பூரில் இருந்து வேலை செய்வதற்கு ஓராண்டு அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது பதவியை சிட்னியை அடிப்படையாக கொண்டது எனவும் அதனால், சிங்கப்பூரில் அவர் பணியாற்ற உரிமம் இல்லை எனவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நிறுவனம் மறுத்துள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்Reuters

இதனடையடுத்து, கண் காயத்தைக் காரணம் காட்டி, மூன்று மாதங்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி பெற்றுள்ளார். பின்னர், விடுமுறையின் போது, தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு தெரியாமல் சிங்கப்பூர் சென்ற அவர், நவம்பர் 17 அன்று மீண்டும் பணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவில்லை.

Man Fired After Laptop Location Reveals Work From Singapore
‘என் பெயரை நினைவில் கொள்ளுங்கள்..’ - சிறையில் அழும் அப்பாவி சிறுமி.. மரண தண்டனை விதித்த ஈரான்!

இந்தச்சூழலில் தான், நிறுவனத்தின் விசாரணையில், அவர் பயன்படுத்திய அலுவலக லேப்டாப்பின் இருப்பிடம் சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் எனத் தெரியவந்தது. இதனால், நிறுவன விதிகளை மீறியதாகக் கூறி அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, நிறுவனம் தன்னை முறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் வேலையை விட்டு நீக்கியுள்ளது என்று கூறி, சம்பத்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சார்லஸ் கிரஹாம் வழக்கு தொடர்ந்தார். அந்த விசாரணையின் போது, ஆஸ்திரேலியா கிளம்ப வர வேண்டிய நேரத்தில் தனது மனைவிக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டதால் தனது பயணத்தை ரத்து செய்திருந்ததாக விளக்கமளித்திருந்தார்.

கோப்புபடம்
கோப்புபடம்Reuters

இந்தச்சூழலில் தான், இந்த விவகாரத்தை விசாரித்த ஆஸ்திரேலியாவின் நியாயமான பணியிட ஆணையம், ஊழியர் தனது இருப்பிடத்தை மறைத்தது தவறு. அவரை பணி நீக்கம் செய்ய நிறுவனத்திற்கும் சரியான காரணம் இருக்கிறது. ஆனால், அவரைப் பணிநீக்கம் செய்த நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்தது. இதனால், பணிநீக்கம் நியாயமற்றது எனத் தீர்ப்பளித்துள்ளது.

எனினும், மீண்டும் அவரை பணியில் அமர்த்துவதற்கோ அல்லது இழப்பீடு வழங்குவதற்கோ உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Man Fired After Laptop Location Reveals Work From Singapore
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com