\
Japan Erupts Against US Troops! Murder Sparks Massive Protests
protest in Japan reuters

அமெரிக்க படைகளுக்கு எதிராக கொந்தளித்த ஜப்பான்.. கொலையால் வெடித்த மாபெரும் போராட்டம்!!

ஒகினாவாவில் அமெரிக்க ராணுவ தளங்களுக்கு எதிராக நீண்டகால கோபம் வெடித்தது!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஜப்பானின் ஒகினாவா தீவில் அமெரிக்க ராணுவப் படைகளின் இருப்புக்கு எதிராக மீண்டும் கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒகினாவா தலைநகர் நஹாவில் உள்ள ஒரு ஹோட்டலில் 39 வயதான அன்னா யாகி என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் 20 வயதான அமெரிக்க கடற்படை வீரர் டெவான் ஜேக்கப் பாலார்ட் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொள்ளை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

protests in Japan
protests in Japanreuters

இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு டோக்கியோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்னா யாகிக்கு நீதி வேண்டும் என்றும், ஜப்பானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

Japan Erupts Against US Troops! Murder Sparks Massive Protests
இஸ்ரேல் தேர்தல் 2026 : நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி? ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி!

ஆனால், போராட்டத்தின் பின்னணியில் தற்போதைய கொலை வழக்கு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக ஒகினாவாவில் நிலவி வரும் அமெரிக்க ராணுவ எதிர்ப்பும் முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்க ராணுவ தளங்கள் தங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக, உள்ளூர் மக்களுக்கு கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குற்றங்கள் மற்றும் விபத்துகள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

protests in japan
protests in japanreuters

இந்த சம்பவத்துக்கு ஜப்பான் அரசும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தரப்பும் அன்னா யாகியின் மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஜப்பான் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஒகினாவாவில் அமெரிக்க வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தளங்களுக்கு வெளியே செல்வது கட்டுப்படுத்தப்பட்டதுடன், மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். 1995-ம் ஆண்டு 12 வயது சிறுமி அமெரிக்க ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகும் ஒகினாவாவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன.

தற்போதைய சம்பவம், அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்பான பல ஆண்டுகால கோபத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

Japan Erupts Against US Troops! Murder Sparks Massive Protests
விமான நிலையங்கள் முதல் Aramco வரை.. சவுதியை அதிரவைத்த ஹவுதிகளின் ஏவுகணை மழை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com