\
Airports to Aramco! Houthis Unleash Missile Rain on Saudi Arabia
Yemen warReuters

விமான நிலையங்கள் முதல் Aramco வரை.. சவுதியை அதிரவைத்த ஹவுதிகளின் ஏவுகணை மழை!!

ஏமனில் மீண்டும் தீவிரமடையும் மோதல்: சவுதியில் பல்வேறு இலக்குகளை தாக்கிய ஹவுதிகள்
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்புக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ஹவுதிகள் சவுதி அரேபியாவின் பல முக்கிய விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ballistic missile
ballistic missile reuters

ஹவுதி ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சவுதியின் பல முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. ரபிக் பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அங்கு தீ ஏற்பட்டதாகவும் ஹவுதிகள் கூறியுள்ளனர். ஆனால், இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை சவுதி அரேபியா உறுதி செய்யவில்லை.

மேலும் புதன்கிழமை அதிகாலை தெற்கு ஏமனில் உள்ள ஏடன் சர்வதேச விமான நிலையத்தை ஹவுதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஏமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஒரு ஏவுகணை விமான நிலைய ஓடுபாதைக்கு அருகில் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எகிப்தின் கெய்ரோவில் இருந்து வந்த விமானம் ஏடனில் தரையிறங்க தயாராக இருந்தது.

yemen war
yemen warReuters

தாக்குதல் காரணமாக விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படாமல், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு திருப்பி விடப்பட்டது. மேலும், ஓடுபாதையில் இருந்த இரண்டு விமானங்களும் பாதுகாப்பு காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

இதற்கிடையே, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள், ரியாத் நகருக்கு வடக்கே ஹவுதிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளன. அந்த ஏவுகணை ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள சனா பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், ஏவுதளத்தை கண்காணித்து வருவதாகவும் சவுதி கூட்டுப்படைகள் கூறியுள்ளன.

மேலும், ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ, ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை பல ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தாக்குதலை சவுதி தரப்பு உடனடியாக உறுதி செய்யவில்லை.

yemen war - file photo
yemen war - file photo reuters

இதற்கிடையில், தென்மேற்கு சவுதியில் உள்ள கமிஸ் முஷைத் நகரை நோக்கி ஏவப்பட்ட ஹவுதி பாலிஸ்டிக் ஏவுகணையையும் இடைமறித்து அழித்ததாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அப்ஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் கமிஸ் முஷைத்தில் உள்ள விமானப்படை தளத்தையும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஹவுதிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலையும் சவுதி அதிகாரிகள் உடனடியாக உறுதி செய்யவில்லை.

இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக செங்கடலில் உள்ள பாப் அல்-மந்தப் நீரிணை மற்றும் மோக்கா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஏற்பட்ட மோதல் ஆகும் . இந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற சவுதி ஆதரவு ஏமன் அரசு படைகள் இந்த வாரம் திடீர் தாக்குதலை தொடங்கியுள்ளன.

ஹவுதிகள் கடந்த மாதம் கைப்பற்றிய சில பகுதிகளை அரசு படைகள் மீண்டும் கைப்பற்றியதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

Yemen war
Yemen war Reuters

ஏமனில் ஹவுதிகள் கடந்த 2014-ம் ஆண்டு தலைநகர் சனாவை கைப்பற்றியதைத் தொடர்ந்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் 2015-ல் போரில் தலையிட்டன. 2022-ல் ஐ.நா. முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், நிரந்தரமான அமைதி ஏற்படவில்லை.

தற்போது மீண்டும் சண்டை தீவிரமடைந்துள்ளதால், ஏமனில் மட்டுமின்றி சவுதி விமான நிலையங்கள், ரியாத் மற்றும் செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கும் புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

Airports to Aramco! Houthis Unleash Missile Rain on Saudi Arabia
Diego Garcia வெறும் Teaserதான்! லண்டன், பாரிஸ் மீது ஈரானின் அடுத்த குறியா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com