\
donald trump
donald trumpreuters

நான் இல்லையென்றால் இஸ்ரேலே இருந்திருக்காது! மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்?

நான் மட்டும் இதைச் செய்யாமல் இருந்திருந்தால், இஸ்ரேலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் இன்று இருந்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர் எதைக் குறிப்பிட்டுப் பேசினார் என்பதைப் பார்க்கலாம்.
Published on: 
Summary

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் அணு ஆயுத திட்டத்தை தடுக்க தாம் முக்கிய பங்காற்றியதாகவும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தாம் காரணமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இதனால், சர்வதேச அளவில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான இடைக்காலத் தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளன. காரணம், டிரம்ப்பின் எஞ்சிய ஆட்சிக் காலத்தில் முக்கியமான சட்டங்களைக் கொண்டு வருவதிலும், அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதிலும் டிரம்ப்புக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதே.

Furious Khamenei warns of cross-border attacks: Iran threatens the US
america vs ironani

இந்தத் தேர்தல் தோல்விக்கு ஈரான் மீதான போர் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்தே விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் தோல்விக்குப் பிறகு பேசிய டிரம்ப்பும், ஈரான் போர் தனது கட்சியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்ததாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கையைத் தான் சரியான முடிவாகவே கருதுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஈரான் மீதான போரைத் தொடர்வது தொடர்பாக வெள்ளை மாளிகையில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளமான Truth Social பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை நான் தடுக்காமல் இருந்திருந்தால், இஸ்ரேலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் இன்று இருந்திருக்காது. இதை யாரும் வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அனைவருக்கும் இது தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதில் தாம் முக்கியப் பங்காற்றியதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் இஸ்ரேலுக்கும் ஒட்டுமொத்த மத்திய கிழக்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்ததாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

donald trump
donald trumpreuters

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டிகடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து சர்வதேச அளவில் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே ஈரான் போரால் உள்நாட்டில் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் டிரம்ப், தற்போது தனது ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

donald trump
500 கி.மீ. இலக்கும் துவம்சம்.. எதிரிகள் படை இனி நடுங்கும்.. கர்ஜிக்க காத்திருக்கும் பிரளய்!
donald trump
அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. இயற்கை காட்டிய கொடூர கோபம்! தெறித்து ஓடிய மக்கள்!