\
pralay missile
pralay missileANI

500 கி.மீ. இலக்கும் துவம்சம்.. எதிரிகள் படை இனி நடுங்கும்.. கர்ஜிக்க காத்திருக்கும் பிரளய்!

பிரளய் என்ற ஏவுகணை இந்திய ராணுவத்தில் விரைவில் இணைய உள்ளது.
Published on: 
Summary

பிரளய் ஏவுகணை, திட எரிபொருளைப் பயன்படுத்தி உடனடியாக ஏவக்கூடிய திறனுடன், 1000 கிலோ வெடிபொருட்களை சுமந்து இலக்குகளை அழிக்கக்கூடியது. இந்திய ராணுவத்தில் விரைவில் இணைக்கப்பட உள்ள இந்த ஏவுகணை, பாதுகாப்புத்துறையின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

வெளிநாடுகளில் இருந்து 75 சதவீதம் அளவுக்கான ஆயுதங்களை இந்திய பாதுகாப்புத்துறை இறக்குமதி செய்து வந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளிடம் இருந்துதான், ஆயுதங்கள் பெருமளவில் வாங்கப்படுகின்றன. முற்றிலும் உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இதன்படி, பல்வேறு போர் கப்பல்கள், ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், பிரளய் என்ற கிவாசி-பாலிஸ்டிக் ஏவுகணையை, முற்றிலும் உள்நாட்டிலேயே மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதாவது, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கடந்த 2015-ஆம் ஆண்டு அன்று, இந்த பிரளாய் ஏவுகணையை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியது.

இதற்கான ஆரம்பகட்ட சோதனைகள், கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்தில் இணைப்பதற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஒடிசா கடற்கரையில் உள்ள ஏவுதளத்தில் இந்த ஏவுகணையின் இறுதி கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை மூலமாக, 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளையும், துல்லியமாக குறி வைத்து துவம்சம் செய்ய முடியும்.

pralay missile
pralay missileANI

மேலும், இது ஆயிரம் கிலோ வரையிலான வெடிபொருட்களை சுமந்து சென்று, இலக்குகளை காலி செய்யக் கூடிய திறன் கொண்டது. வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் எளிதில் கணிக்கக் கூடிய நேர்கோட்டுப் பாதையில் செல்லும். ஆனால், இந்த ஏவுகணை இலக்கை நெருங்கும்போது தனது பாதையை மாற்றும் ஆற்றலை பெற்றுள்ளது. இதனால், இந்த ஏவுகணையை எதிரிகளால் எளிதில் அழிக்க முடியாது.

இதுமட்டுமின்றி, இது திட எரிபொருளைப் பயன்படுத்துவதால், எந்த நேரத்திலும் உடனடியாக ஏவக்கூடிய வகையில் தயார் நிலையில் வைக்க முடியும். இது போர்க்களத்தில் ராணுவத்திற்கு விரைவான செயல்பாட்டுத் திறனை வழங்குகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட ஏவுகணை, விரைவில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது. இது பாதுகாப்புத்துறையின் மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

pralay missile
இதுதான் சிறந்த கம்பேக்.. கெத்தாக வந்த நடிகர் ஸ்ரீ! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!