இஸ்ரேலின் தொடர் தாக்குதல்.. ஹமாஸின் விமானப்படை தளபதி உயிரிழப்பு

இஸ்ரேலின் கோர தாக்குதலில் ஹமாஸின் விமானப்படைத் தளபதி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர்pt web

காஸா மீதான தாக்குதல் 4ஆவது வாரத்தை நெருங்கி வரும் நிலையில் போரை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹமாஸின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும் சுரங்கப்பாதைகளை அழிப்பதில் இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது. இதுவரை வான்வழித்தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டிருந்த இஸ்ரேல் தற்போது தரைவழித்தாக்குதல்களும் மெல்ல ஒத்திகை பார்க்கத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ்pt web

கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் பீரங்கிகள் காஸா நிலப்பரப்பிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியிருந்தன. அடுத்து முழு வீச்சில் இஸ்ரேல் தரைவழித்தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் எவ்வளவு தீவிரமாக தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ஹமாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நெதன்யாகுவின் படைகள் ஒருபோதும் வெற்றியை ஈட்ட முடியாது என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
'அசுரன்' பட பாணியில் காஸா மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட யூதர்கள்..!

இதற்கிடையே காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் இணைய சேவை, செல்போன் சேவை மட்டுமல்லாது வழக்கமான தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தங்களது ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஐநாவும் செஞ்சிலுவைச் சங்கமும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
உலகத்தோடு காசாவிற்கு இருந்த தொலை தொடர்பு அறுபட்டது - உக்கிரமான தாக்குதலில் இஸ்ரேல்!!

இந்நிலையில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் விமானப்படைத் தளபதி அட்சம் அபூ ரஃபா உயிரிழந்தார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இருந்த போதும் ஹமாஸ் அமைப்பு இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை.

ஏற்கெனவே ஹமாஸின் நிதியமைச்சர் மற்றும் ஹமாஸின் பாதுகாப்பு தடவாளங்களை கவனிக்கும் தளபதிகளையும் இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கி வரும் சூழலில், தற்போது விமானப்படைத் தளபதியையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அங்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com