நெதன்யாகு, அயதுல்லா கமெனி
நெதன்யாகு, அயதுல்லா கமெனிPT web

இஸ்ரேல் - ஈரான் மோதல்.. கொதிநிலையில் பாலைவன பூமி

ஈரான் - இஸ்ரேல் இடையிலான தாக்குதல் 3ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
Published on

மாறி மாறி தாக்குதல்

இஸ்ரேலும் ஈரானும் மாறிமாறி ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருகின்றன. ஈரானிய பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தின் மீதும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானில் உள்ள எண்ணெய் உற்பத்தி மையங்கள், ஆயுத தொழிற்சாலைகளை இஸ்ரேல் தாக்கக்கூடும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஈரானின் தலைநகரில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதாக தெஹ்ரான் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளையும் தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் - ஈரான்முகநூல்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 6 பேர் இறந்ததாகவும் 180 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவில் பல கட்டடங்கள் இடிந்து கிடப்பதை காண முடிவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய தாக்குதல் இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் போர் விமான எரிபொருள் உற்பத்தி இடங்களை குறிவைத்து இருந்ததாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே....

ஈரானில் அணுசக்தி மையங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்திருப்பதையும் AP செய்தி நிறுவனத்தின் படங்கள் காட்டுகின்றன. இதற்கிடையே இரு நாடுகளும் போரை நிறுத்த வேண்டும் என சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவரான காஜா கல்லாஸ் அலுவலகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.. நிதானத்தைக் காட்ட வேண்டும்” என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

kaja kallas
kaja kallaspt web

ஏற்கனவே, இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே தாங்களும் சண்டையை நிறுத்துவோம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், ஈரானிய அணுசக்தித் தளங்கள்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போது ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் மௌனம் சாதித்தது குறித்தும் ஈரான் விமர்சித்துள்ளது. ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் இனி ஒத்துழைக்கப்போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

நெதன்யாகு, அயதுல்லா கமெனி
‘கள் எங்கள் உணவு.. கள் எங்கள் உரிமை’ பனை மரமேறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்

அப்பட்டமான ஆக்கிரமிப்பு

ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சரான அப்பாஸ் அரக்ஸி, இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் அண்டை நாடுகளுக்கு விரிவடைவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஈரான் கத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் கடல்சார் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து பேசிய அரக்ஸி அதை "ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் மிகவும் ஆபத்தான செயல்" என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நோக்கம் ஈரானின் எல்லைக்கு வெளியே போரை இழுப்பது என்றும் விமர்சித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரம் அணுசக்தி தொடர்பான தங்கள் ஒப்பந்தத்தை ஏற்றால் மட்டுமே மேலும் சீரழிவுகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் ஈரானை ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் இந்த சூழலில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

நெதன்யாகு, அயதுல்லா கமெனி
இடைநிற்றல் மாணவர்களை சந்தித்த விருதுநகர் ஆட்சியர்.. மக்களுக்கு முதலமைச்சர் வைத்த வேண்டுகோள்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com