\
Israel Election: Why Returning Voters Worry Netanyahu’s Likud
இஸ்ரேல்Reuters

இஸ்ரேல் பொதுத்தேர்தல்.. நாடு திரும்பும் வெளிநாடு வாழ் வாக்காளர்கள்.. நெதன்யாகு வெற்றி கேள்விக்குறி?

இஸ்ரேல் பொதுத்தேர்தலில் வாக்களிக்க பல்லாயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இஸ்ரேலியர்கள் தாய்நாடு திரும்புகின்றனர்.
Published on: 

இஸ்ரேலில் நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்றனர். பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு (Likud Party) இந்த விவகாரம் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்துப் பார்க்கலாம்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கு குறைந்தது 61 இடங்களைப் பெறுவது அவசியம். 73 லட்சம் வாக்களைகளைக் கொண்ட இஸ்ரேலில், 8 வாக்காளர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இஸ்ரேலிய வாக்குப்பதிவு நடைமுறைகளின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள், தபால் மூலமாகவோ இணையம் மூலமாகவோ வாக்களிக்க முடியாது. இதனால், வாக்களிக்க விரும்பும் மக்கள் தேர்தல் நாளன்று நேரடியாக இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகுReuters

இந்தச்சூழலில் தான், நாளை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க பல்லாயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இஸ்ரேலியர்கள் வாக்களிக்க தாய்நாடு திரும்பிவருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐடி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சுமார் 67 ஆயிரம் இஸ்ரேலியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இவர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் அமெரிக்காவில் இருந்தும், மற்றவர்கள் ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சொந்த நாடு திரும்புகின்றனர்.

Israel Election: Why Returning Voters Worry Netanyahu’s Likud
கைப்பற்றப்பட்ட காவல் நிலையம்.. பாகிஸ்தான் ராணுவக் கேப்டன் கொ*ல.. தாண்டவம் ஆடும் பலுச் விடுதலைப்படை?

வெளிநாடுகளில் வசிக்கும் இஸ்ரேலியர்களில் பலர் தற்போதைய அரசுக்கு எதிரான மாற்றத்தை விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்தத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவு என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெளிநாடு வாழ் இஸ்ரேலியர்கள் ஒவ்வொரு வாக்கும் லிகுட் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருத்தப்படுக்கிறது.

இதை மனதில் கொண்டே, சமீபத்தில் வெளிநாடு வாழ் வாக்காளர்களுக்குப் பயணச் சலுகைகள் வழங்கப்படுவதை நெதன்யாகு அரசு சமீபத்தில் நிறுத்தியிருந்தது. எனினும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்தப்பணத்தில் தாய்நாடு திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ்Reuters

ஹமாஸ் போர் மற்றும் ஈரானுடனான நேரடி மோதல் உள்ளிட்ட பிராந்தியத்தின் பாதுகாப்பை உலுக்கிய போர் நடவடிக்கைகளுக்குப் பிறகு இஸ்ரேல் பொதுத் தேர்தல் நடைபெறுவதால், மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சூழல் மற்றும் சர்வதேச உறவுகளிலும் இந்தத் தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்தச்சூழலில் தான், இஸ்ரேல் பொதுத்தேர்தலில் சர்வதேச கவனம் குவிந்துள்ளது.

இந்தத் தேர்தலுகான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் நிலையில், இரவு 10 மணி வரை வாக்களிக்காலம் என இஸ்ரேல் மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

Israel Election: Why Returning Voters Worry Netanyahu’s Likud
ஈரானால் அதிகரிக்கும் அச்சம்.. மத்திய கிழக்கிலிருந்து அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com