\
BLA Claims Pakistan Police Station Capture, Army Captain Killed
பாகிஸ்தான் - பலூசிஸ்தான்Reuters

கைப்பற்றப்பட்ட காவல் நிலையம்.. பாகிஸ்தான் ராணுவக் கேப்டன் கொ*ல.. தாண்டவம் ஆடும் பலுச் விடுதலைப்படை?

அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான், 44 சதவீத நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய மாகாணமாகும்.
Published on: 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகத் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் பலூச் விடுதலைப் படை, அந்நாட்டின் காவல் நிலையம் ஒன்றைக் கைப்பற்றியதுடன், ராணுவ கேப்டன் ஒருவரையும் கொன்றதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தால் தங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்றும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சவால் விடுத்துள்ளார். இந்நிலையில், அங்கு என்ன நடக்கிறது? என்பது குறித்துப் பார்க்கலாம்.

பலுசிஸ்தான்
பலுசிஸ்தான்Reuters

அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான், 44 சதவீத நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய மாகாணமாகும். இந்தப் பலுசிஸ்தான், தங்களை பாகிஸ்தான் அரசு புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி, அரைநூற்றாண்டாக தனி நாடு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்தப் போராட்டத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் பலூச் விடுதலைப் படையின் (Balochistan Liberation Army - BLA) பின்னணியில், பயங்கரவாதிகள் இருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி, இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அரசு, ராணுவம் மூலம் ஒடுக்கி வருகிறது.

இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான் ராணுவம் பலுச் விடுதலைப் படை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பலுச் விடுதலைப் படை ‘ஆபரேஷன் அல்மாஸ்’ (Operation Almas) என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

BLA Claims Pakistan Police Station Capture, Army Captain Killed
இஸ்லாத்திற்கு எதிரி? எப்ஸ்டீன் கோப்புகளை கையிலெடுத்த ஹவுதி.. சவுதிக்கு எதிரான புதிய திட்டம்!

அந்தவகையில், இன்று பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பலூச் விடுதலைப்படை நடத்திய தாக்குதலில், அந்நாட்டு ராணுவத்தின் சிறப்பு சேவை குழுவை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் முழானி (Muzhani) காவல் நிலையத்தை தாங்கள் கைப்பற்றியதாகவும், அங்கிருந்த ராணுவக் கேப்டன் ஒருவரைக் கொன்றதுடன், காவல்நிலையத்தில் இருந்த ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களைக் கைப்பற்றியதாகவும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேஜர் குவஹ்ராம் பலூச் (Major Gwahram Baloch) தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் ராணுவத்தால் தங்களை எதிர்கொல்ல முடியவில்லை எனவும் பலுச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது.

Major Gwahram Baloch
Major Gwahram BalochReuters

இதற்கிடையில், பாகிஸ்தானின் பல பகுதிகளில் பலுசிஸ்தான் போராளிகள் குழு நடத்திய தாக்குதல் சம்பவத்தின் காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, துப்பாக்கிச் சூடு நடைபெறும் பின்னணியில், “பாகிஸ்தான் தோல்வியடைந்துவிட்டது; எங்களை எதிர்த்துப் போரிட முடியாது” என்று ஒரு பெண் கூறும் வீடியோவும் வெளியாகியுள்ளது. மற்றொரு வீடியோவில், பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், குவாதர் பகுதியில் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினருக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு, பல ஆண்டுகளாகப் பிரிவினைவாத ஆயுதக் குழுக்களுக்கும் பாகிஸ்தான் அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் பலூசிஸ்தான் மாகாணத்தில், இந்தச் சம்பவங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

BLA Claims Pakistan Police Station Capture, Army Captain Killed
ஈரானால் அதிகரிக்கும் அச்சம்.. மத்திய கிழக்கிலிருந்து அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com