\
Rising Iran Threat Forces US to Evacuate Middle East Officials
Marco Rubio, Trump & Hegseth Reuters

ஈரானால் அதிகரிக்கும் அச்சம்.. மத்திய கிழக்கிலிருந்து அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!!

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு: அமெரிக்க அதிகாரிகள் வெளியேற உத்தரவு
Published on: 

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் அமெரிக்க அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் கொலைச் சதிகளில் ஈடுபடுவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜே கிளேட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு அக்டோபர் 23ஆம் தேதி அனுப்பிய குறிப்பில் இந்த எச்சரிக்கை இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஆக்சியோஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

evacuating officials
evacuating officials Reuters

மத்திய கிழக்கிலும் பிற பகுதிகளிலும் உள்ள அமெரிக்கத் தூதர்கள் மற்றும் அதிகாரிகளைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் கணிசமாக அதிகரித்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சில கொலை முயற்சித் திட்டங்கள் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சதித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிவைக்கப்பட்ட நபர்கள் அல்லது நாடுகள் குறித்த குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் ஜெட்டா, தஹ்ரான் (Dhahran) நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டது.

US officials
US officialsReuters

சவூதி அரேபியா தவிர்த்து ஜோர்டான் (Jordan), பஹ்ரைன் (Bahrain), குவைத் (Kuwait), கத்தார் (Qatar), ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் லெபனான் (Lebanon) போன்ற பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா ரகசியமாகக் குறைத்து, கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஈரான் ஆதரவு ஹவுதிகள் சவுதி அரேபியாவைத் தாண்டி மற்ற நாடுகளிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்

ஈரான் தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சதித் திட்டங்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக மத்திய கிழக்கில் உள்ள தனது பல்வேறு இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கா தனது படைகளையும் கணிசமாகக் குறைத்து, மறுசீரமைப்பு செய்து வருகிறது

Rising Iran Threat Forces US to Evacuate Middle East Officials
"நாங்க தவிக்கிறோம்... ஹார்முஸை திறந்துவிடுங்கள்!” ஈரானிடம் கெஞ்சும் அமெரிக்காவின் நட்பு நாடு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com