இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ முகநூல்

"குழந்தைகளைக் கொன்ற குற்றவாளி; நெதன்யாகுவை குறிவைத்துக் கொல்வோம்" - ஈரான் எச்சரிக்கை.!

"குழந்தைகளைக் கொன்ற குற்றவாளி" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை முழு பலத்துடன் அவரைத் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி கொல்வோம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சூளுரைத்துள்ளது.
Published on

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் புதிய இலக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறி வைக்கப்பட்டுள்ளார் . நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் தான், குழந்தைகளைக் கொன்ற குற்றவாளி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பின்தொடர்ந்து குறி வைத்துக் கொல்வோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சூளுரைத்துள்ளது.

IRGC
IRGCMajid Saeedi

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனியைக் கொல்லப் போவதாக மறைமுக மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்ரேலிய ராணுவம் மொஜ்தபா-வை குறிவைக்குமா அல்லது ஹெஸ்பொல்லாவின் தலைவர் நைம் காஸ்ஸெமை குறிவைக்குமா? என்று நெதன்யாகுவிடம் கேட்கப்பட்டது. அப்போது, இஸ்ரேலுக்கு விரோதமான குழுக்களின் தலைவர்கள் குறிவைக்கப்படலாம் என்று மொஜ்தபாவை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், நாங்கள் என்ன திட்டமிடுகிறோம் அல்லது என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றிய சரியான அறிக்கையை இங்கு வழங்க நான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். .

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ
நிலத்தடியில் ஈரானின் ஏவுகணை நகரம்.. வீடியோ காட்சிகளால் அமெரிக்கா அதிர்ச்சி.!

தொடர்ந்து, ஈரானிய ஆட்சியாளர்களின் எதிரிகளுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குகிறதா என்று நெதன்யாகுவிடம் கேட்கப்பட்டபோது, "நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஈரானில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான உகந்த சூழ்நிலையை நாங்கள் உருவாக்குகிறோம், ஆனால் ஈரான் மக்கள் ஆட்சியைக் கவிழ்ப்பார்களா அல்லது மாட்டார்களா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது ஒரு ஆட்சி உள்ளிருந்து கவிழ்க்கப்படும்படியான செயல்களை நாங்கள் செய்து வருகிறோம் " என்றார். இதனைத் தொடர்ந்தே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லப்போவதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சூளுரைத்துள்ளது .

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ
ஹார்முஸ் நீரிணைக்கு போர் கப்பல்களை அனுப்புங்கள்.. உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com