டிரம்ப், அமெரிக்க போர் கப்பல்
டிரம்ப், அமெரிக்க போர் கப்பல்pt web

ஹார்முஸ் நீரிணைக்கு போர் கப்பல்களை அனுப்புங்கள்.. உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை!

ஈரானின் தடையால் பாதிக்கப்படும் நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படுக என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
Published on
Summary

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெற உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் தடையால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுவதால், உலகளாவிய பொருளாதாரத்தை பாதுகாக்க அமெரிக்கா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால், அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்றும், அந்த பாதையில் ஏற்படும் எந்த தடையும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஹோர்முஸ் பாதுகாப்பை அமெரிக்கா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் கவனிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

The Strait of Hormuz
The Strait of Hormuz file photo
டிரம்ப், அமெரிக்க போர் கப்பல்
'ஈரானில் காந்தி பெயரில் மருத்துவமனை..' இந்தியாவை நேசித்த அலி கமேனி! சுவாரசிய தகவல்!

ஹோர்முஸ் நீரிணைக்கு உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேற்காசிய போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் அரசு தடை விதித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.

ஈரான் எண்ணெய் கப்பல்
ஈரான் எண்ணெய் கப்பல்web

இந்தநிலையில் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை பாதுகாக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணைக்கு உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஈரானின் தடையால் பாதிக்கப்படும் நாடுகள் அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிரம்ப், அமெரிக்க போர் கப்பல்
2 வாரத்தில் அமெரிக்கா கெஞ்ச ஆரம்பித்துவிட்டது.. பகிரங்கமாக விமர்சித்த ஈரான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com