ஈரான் உச்ச தலைவர் கமேனி இறுதிச்சடங்கி ஒத்திவைப்பதாக அறிவிப்பு
ஈரான் உச்ச தலைவர் கமேனி இறுதிச்சடங்கி ஒத்திவைப்பதாக அறிவிப்புweb

காமேனியின் இறுதிச்சடங்கை ஒத்திவைத்த ஈரான்.. இஸ்ரேல் - அமெரிக்காவின் தொடர் தாக்குதலால் முடிவு!

மறைந்த ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறுதிச்சடங்கை ஒத்திவைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
Published on
Summary

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதால், ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதனால், காமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஈரான் போர் 6வது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்புகளும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் பதிலடி தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தவருகிறது.

ஈரான் உச்ச தலைவர் கமேனி இறுதிச்சடங்கி ஒத்திவைப்பதாக அறிவிப்பு
’ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..’ உலகிற்கே 'லாக்டவுன்' போட்ட ஈரான்!

6வது நாளை எட்டிய போர்..

இஸ்ரேல் - ஈரான் போர் 6வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை ஈரான் மீது வீசியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. தலைநகர் தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் உள்ளஏ வுகணைத் தளங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியுள்ளது. இந்தமோதலில் ஈரானில் இதுவரை ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது தாக்குதல்

இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத்தாக்குதலில் இஸ்ரேலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தக் கூட்டு நடவடிக்கை மேற்கு ஆசியா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசூழலில் இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்துவருவதால் ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறுதிச்சடங்கை ஒத்திவைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் உச்ச தலைவர் கமேனி இறுதிச்சடங்கி ஒத்திவைப்பதாக அறிவிப்பு
ஈரான்| ஹார்முஸ் நீரிணை என்றால் என்ன..? ஒரு முடிவால் ஆடிப்போன உலக நாடுகள்! என்ன விளைவுகள் ஏற்படும்..?

இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு..

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தீவிரமாக தொடர்வதால், ஈரானில் உள்ள அதிகாரிகள், காமேனியின் இறுதிச்சடங்கை ஒத்திவைத்துள்ளனர்.

ஈரான் உச்ச தலைவர் கமேனி
ஈரான் உச்ச தலைவர் கமேனி

முன்னதாக, காமேனியின் உடல், அவரதுபிறந்த ஊரான மஷாத் நகரில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத், ஷியா பிரிவினரின் புனிதத் தலமான இமாம் ரேசா நினைவிடத்தைக் கொண்டுள்ளது. 36 ஆண்டுகள் ஈரானின் உச்ச அதிகாரத்தில் இருந்த காமேனி கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

ஈரான் உச்ச தலைவர் கமேனி இறுதிச்சடங்கி ஒத்திவைப்பதாக அறிவிப்பு
2-ஆம் உலகப்போருக்கு பின்.. மீண்டும் அமெரிக்கா கையிலெடுத்த ஆயுதம்! சுக்குநூறான ஈரான் போர்க்கப்பல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com