Iran First Fires Dancing of Missile Sejjil in attack on Israel
செஜ்ஜில் ஏவுகணைஎக்ஸ் தளம்

அச்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேல்| ஆட்டம் காட்டிய ஈரான்.. முதன்முறையாக ’செஜ்ஜில்’ ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தற்போதைய மோதலில் ஈரான் தனது செஜ்ஜில் பாலிஸ்டிக் ஏவுகணையை முதல்முறையாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
Published on

ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஈரான் தனது செஜ்ஜில் பாலிஸ்டிக் ஏவுகணையை முதல்முறையாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவ்விரு நாடுகள் அச்சத்தில் உறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா காமேனி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி டெஹ்ரானிக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த மரணத்திற்கு பதிலடி கொடுப்பதாக தெரிவித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. மோதல் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. போர் 16-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது 'USS Tripoli' என்ற நீர்-நிலப் போர் கப்பலையும், சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Iran First Fires Dancing of Missile Sejjil in attack on Israel
Sejjilx page

இந்த நிலையில், ஈரான் தனது மிகவும் மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்றான செஜ்ஜில் ஏவுகணையை முதல்முறையாக ஏவியுள்ளது. இஸ்ரேலிய இராணுவ மற்றும் நிர்வாக மையங்கள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை இந்த தாக்குதல்கள் குறிவைத்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட இராணுவ தளங்களை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Iran First Fires Dancing of Missile Sejjil in attack on Israel
ஈரான் | இஸ்ரேல் விமானப்படை அதிரடித் தாக்குதல்.. உச்சத் தலைவரின் விமானம் அழிப்பு?

செஜ்ஜில் என்பது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இரண்டு-நிலை பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும், இது திட உந்துசக்தியால் இயக்கப்படுகிறது. இது சஜ்ஜில், அஷோரா மற்றும் அஷுரா உள்ளிட்ட பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்ட இந்த ஏவுகணை, சுமார் 500-1,000 கிலோகிராம் எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லக்கூடியது. இந்த ஏவுகணை தோராயமாக 18 மீட்டர் நீளமும், ஏவப்படும்போது 23 டன்களுக்கு மேல் எடையும் கொண்டது.

Iran First Fires Dancing of Missile Sejjil in attack on Israel
Sejjilx page

இந்த வரம்பு இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் உள்ளிட்ட இடங்களைத் தாக்கக்கூடும் என்பதாகும். பறக்கும்போது பாதை மற்றும் சூழ்ச்சியை மாற்றும் திறன் காரணமாக இந்த ஏவுகணை ’நடன ஏவுகணை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதாவது, அதன் விரைவான ஏவுதல் திறன் மற்றும் சூழ்ச்சித்திறன் இடைமறிப்பை மிகவும் கடினமாக்குகிறது. இவ்வகையான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவது எதிராளிகளுக்கு கடினமான பணியாகவும் கருதப்படுகிறது. ஈரான் முதன்முதலில் 2008ஆம் ஆண்டு செஜ்ஜில் ஏவுகணையை சோதித்துப் பார்த்தது. அப்போது அந்த ஏவுகணை சுமார் 800 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து, 2009-ஆம் ஆண்டிலிருந்து கூடுதலாக நான்கு பறக்கும் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆறாவது சோதனையின்போது, ​​அந்த ஏவுகணை சுமார் 1,900 கிலோமீட்டர் தூரம் பயணித்து இந்தியப் பெருங்கடல் பகுதியை அடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதன் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Iran First Fires Dancing of Missile Sejjil in attack on Israel
2 வாரத்தில் அமெரிக்கா கெஞ்ச ஆரம்பித்துவிட்டது.. பகிரங்கமாக விமர்சித்த ஈரான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com