ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்காPt web

2 வாரத்தில் அமெரிக்கா கெஞ்ச ஆரம்பித்துவிட்டது.. பகிரங்கமாக விமர்சித்த ஈரான்!

எங்களுடன் போர் தொடங்கிய இரண்டே வாரத்தில் அமெரிக்கா கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளது என ஈரான் அமைச்சர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
Published on
Summary

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போரில் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஈரானின் தலைவரான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும் ஈரானை தாக்கும் என்றே பரவலாக பேசப்பட்டது. அப்படி இந்த போர் ஏற்பட்டால் இரு தரப்புக்கும் அதிக சேதம் ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக போர் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளது ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் பதிலடி முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது.

அயதுல்லா அலி காமேனி, டொனால்ட் ட்ரம்ப்
அயதுல்லா அலி காமேனி, டொனால்ட் ட்ரம்ப்pt web

அதோடு உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியையும் ஈரான் முடக்கியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த பாதிப்பை சரி செய்ய ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ள அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் குறுகிய கால அனுமதி அளித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா
‘ஈரான் உடனடியாக இதை நிறுத்தணும்..’ திடீரென அறிக்கைவிட்ட ஹமாஸ்! பின்னணி காரணம் என்ன?

இந்த நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ஷி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று கடந்த சில மாதங்களாக அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை மிரட்டி வந்தது. ஆனால், ஈரானுடன் போர் தொடங்கி இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு உலக நாடுகளை வெள்ளை மாளிகை கெஞ்சி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Abbas Araghchi
சையத் அப்பாஸ் அராக்ஷிx

மேலும், ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு எதிரான இந்த சட்டவிரோதப் போருக்கு அமெரிக்காவிற்கு ஆதரவு தருவதையும் அவர் விமர்சித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தங்களுக்கு உதவும் என்று நினைத்து ஐரோப்பா இந்தத் தவறைச் செய்கிறது, இது மிகவும் பரிதாபமானது என்று அவர் கூறியுள்ளார்.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் புதிய தலைவரின் தலைக்கு விலை.. ரூ.92 கோடி பரிசு அறிவித்த அமெரிக்கா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com