The details of Blue Sparrow missile Israel used to kill Khamenei
அயதுல்லா அலி காமேனிpt web

ஈரான் | இஸ்ரேல் விமானப்படை அதிரடித் தாக்குதல்.. உச்சத் தலைவரின் விமானம் அழிப்பு?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா காமேனியின் விமானம் அழிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
Published on

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா காமேனி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி டெஹ்ரானிக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த மரணத்திற்கு பதிலடி கொடுப்பதாக தெரிவித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேசமயம், ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத்தாக்குதல்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத்தாக்குதல்web

இந்தச் சூழலில்தான், ஈரானின் புதிய உச்சத்தலைவராக கடந்த வாரம் அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி பதவியேற்றுள்ளார். ஆனால், நாங்கள் நடத்திய தாக்குதலில் அவரும் படுகாயம் அடைந்திருக்கிறார் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஈரான் தரப்பில் இருந்த் மொஜ்தபாவுக்கு சிறிய அளவிலான காயங்களே எனத் தெரியப்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில்தான், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா காமேனி, உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் உள்நாட்டு, சர்வதேசப் பயணங்களுக்கு பயன்படுத்திவந்த விமானங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானிய ஆட்சியின் மற்றொரு முக்கிய மூலோபாயச் சொத்து அகற்றப்பட்டுள்ளது. இது அவர்களின் ராணுவ மறுசீரமைப்புத் திறனைக் குறைக்கும் எனவும் இஸ்ரேலிய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஏற்கனவே, அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் பயன்படுத்திய விமானமும் அழிக்கப்பட்டுள்ளது ஈரானிய ஆட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

The details of Blue Sparrow missile Israel used to kill Khamenei
ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ஹவுதி குழு? மூடப்படும் மற்றொரு ஜலசந்தி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com