Inside Iran’s Decision to Postpone Khamenei’s Funeral
அயதுல்லா அலி காமேனிReuters

கொல்லப்பட்ட அலி கமேனி.. ஈரான் அடக்கம் செய்யாதது ஏன்? வெளியான முக்கிய தகவல்!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி காமெனி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடலை ஈரான் அடக்கம் செய்யாமல் வைத்திருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.
Published on

செய்தியாளர்: விக்னேஷ்

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை ஆரம்பித்து இருந்தது. அதுவே பிறகு போராக மாறி ஒரு மாதமாக இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. பின் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. இப்போதும் கூட அங்குப் பதற்றமான சூழலே இருக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் என்ற நிலையே இருக்கிறது. இந்த யுத்தத்தின் முதல் நாளே, அதாவது பிப்ரவரி 28 தாக்குதலின் போது, அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அப்போதிலிருந்தே உடல் அடக்கம் செய்யப்படாமல் தற்போது வரை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The details of Blue Sparrow missile Israel used to kill Khamenei
அயதுல்லா அலி காமேனிpt web

அலி கமேனி பல ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்தவர். எனவே, அவரது இறுதிச் சடங்கை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்துவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் பல லட்சம் மக்களை ஒன்றுகூட வைத்து இறுதிச் சடங்கு நடத்துவதும் ஆபத்தானது. ஏனென்றால், இதர முக்கிய தலைவர்கள், மக்கள் கூடும் இறுதி ஊர்வலத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தினால், அது ஈரான் ஆட்சியையே வேரோடு சாய்த்துவிடும் எனக் கவலைப்படுகிறார்களாம் அந்நாட்டு அதிகாரிகள். தற்போது எந்தவொரு ரிஸ்க்கையும் எடுக்கும் நிலையில் ஈரான் அரசு இல்லை எனவும் ஈரான் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் கவனமாகவே ஒவ்வொரு நடவடிக்கையையும் செய்ய வேண்டி காட்டியத்தில் இருக்கிறது.

Inside Iran’s Decision to Postpone Khamenei’s Funeral
ஈரான் - அமெரிக்கா பிடிவாதம்.. மீண்டும் போர் தொடருமா.. நாளை பேச்சுவார்த்தை.?

1989-ல் ஈரானின் முதல் உச்ச தலைவராக இருந்த ருஹோல்லா கமேனி மறைந்தபோது, சுமார் ஒரு கோடி மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால், அதன் பிறகு அத்தகைய மக்கள் எழுச்சி தென்படவில்லை. மாறாக, மக்கள் கிளர்ச்சி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஈரான் அரசு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஈரான் அரசு குழப்பத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

The details of Blue Sparrow missile Israel used to kill Khamenei
அயதுல்லா அலி காமேனிpt web

மேலும், அலி கமேனி உடலை நீண்ட நாட்களே இப்படியே வைத்திருக்கவும் முடியாத காரணத்தால் கமேனியின் சொந்த ஊரான 'மஷாத்' நகரில் ரகசியமாகவோ அல்லது பலத்த பாதுகாப்புடனோ அடக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாட்டின் உச்ச தலைவர் இறந்து வாரங்களாகியும் அவரை முறையாக அடக்கம் செய்ய முடியாத நிலை, அந்த நாட்டின் அதிகார மட்டம் எவ்வளவு குழப்பத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏப்ரல் 8-ல் போடப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. அதற்குள் இறுதிச் சடங்கை நடத்தத் தவறினால், மீண்டும் போர் வெடிக்கும் நிலையே உள்ளது.. இது நிலைமையை மேலும் மோசமானதாகவே மாற்றும் எனவும் எஞ்சப்படுகிறது.

Inside Iran’s Decision to Postpone Khamenei’s Funeral
”எதிரிகள் மிகச்சிறிய தவறு செய்தாலும்.. முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம்” - ட்ரம்ப் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com