Indians in Iran Advised to Evacuate Without Delay
ஈரான் - இந்தியாweb

”ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேறுங்கள்” - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர், தற்போது பாகிஸ்தானின் மத்தியஸ்த்திற்குப் பிறகு 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் அமெரிக்காவிடம் வைத்துள்ள நிலையில், இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என ஈரான் அமெரிக்கா தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. இவை பரிசீலிக்கப்படும் பட்சத்தில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்காPt web

முன்னதாக, ஹார்முஸை 24 மணி நேரத்தில் திறக்கவில்லையென்றால் ஒரே இரவில் ஈரான் அழிக்கப்பட்டுவிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்திற்கு வீட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கிடையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

Indians in Iran Advised to Evacuate Without Delay
ஈரானிடம் மண்டியிட்ட US.. சுங்கச்சாவடியாக மாறிய ஹார்மூஸ்.. ட்ரம்புக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு!

இந்த சூழலில் தான், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவிறுத்தியுள்ளது. அதில், தூதரகத்துடன் இணைந்து குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, தூதரக அதிகாரிகளுடனான முன்கூட்டிய ஆலோசனை இல்லாமல் எந்த சர்வதேச நில எல்லையையும் அணுக வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.

முன்னதாக, ஈரானில் இருந்து இதுவரை 1700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஈரானில் இருந்து தரைவழியாக அண்டை நாடுகளுக்கு சென்றிருக்கும் நிலையில், அங்கிருந்து அவர்கள் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Indians in Iran Advised to Evacuate Without Delay
முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்.. ஆனாலும் தொடரும் தாக்குதல்.. பதற்றம் குறையாத வளைகுடா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com