Severe criticism has arisen within the United States from iran ceasefire
Strait of Hormuz trump Fails

ஈரானிடம் மண்டியிட்ட US.. சுங்கச்சாவடியாக மாறிய ஹார்மூஸ்.. ட்ரம்புக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு!

ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதை ஈரானிடம் மண்டியிட்டதாக கருதவேண்டும் என அமெரிக்காவில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
Published on

அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டியும் தொடர்ந்த நிலையில், இது கச்சா எண்ணெய் வணிகத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20% பங்கு ஈரான் - ஓமன் கடல் பகுதியில் உள்ள ஹார்மூஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்தச் சூழலில் இந்த போர் காரணமாக இந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மார்ச் 9-ஆம் தேதியன்று, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டாலர்கள் என வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையை எட்டியது. அதன் பின்னர் சற்று குறைந்தாலும், 100 டாலர்களை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக உடன்படிக்கை ஏற்பட்டு இரண்டு வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்தின்போது, ஈரான் சார்பில் 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் சில கோரிக்கைகளை அமெரிக்கா தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Severe criticism has arisen within the United States from iran ceasefire
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம்.. பாகிஸ்தான் மத்தியஸ்தராக ஆனது எப்படி?

இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை ஈரான் அரசு தனது மிகப்பெரிய வெற்றியாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ட்ரம்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிலும் இந்தப் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு ஈரானும் ஓமனும் சேர்ந்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது அந்நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Lindsey Graham
Lindsey Graham

இதனால் உள்நாட்டில் ட்ரம்பின் செல்வாக்கு மிகவும் குறைந்துள்ளது. ஹார்முஸ் நீர்சந்தி ஒரு சர்வதேசப் பகுதி. அங்கு கட்டணம் வசூலிக்க ஈரானுக்கு உரிமை இல்லை என்றும் அமெரிக்கா இதனை அனுமதித்தது, சர்வதேசக் கடல் சட்டமான UNCLOS-ஐ நாமே மீறுவதற்குச் சமம் என்றும் அமெரிக்காவின் Fox News செய்தி நிறுவனம் விமர்சித்துள்ளது.

அதே போல அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham) என்பவர் அமெரிக்காவின் இந்த செயல் ஈரானிடம் மண்டியிடுவதற்கு சமம் என்றும், நாம் ஈரானின் மிரட்டலுக்குப் பணிந்துவிட்டோம் என்பதை காட்டுகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

Severe criticism has arisen within the United States from iran ceasefire
ஈரான் போர் நிறுத்தம் | கடைசி நேரத்தில் அழுத்தம் கொடுத்த சீனா.. ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com