\
Indian Consultants Behind US Election Campaign Strategies?
கோப்புபடம்Reuters

அமெரிக்க தேர்தலுக்கு இந்தியாவில் வியூகம்? வாக்காளர்களின் மனநிலையை மாற்ற முயற்சி? வெளியான ரிப்போர்ட்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், இந்திய வியூக நிறுவனங்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களின் மனநிலையை மாற்ற முயற்சித்ததாக அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.
Published on: 

அரசியல்வாதிகள் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிப்பது மட்டுமே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்ற நிலை, சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு முற்றிலும் மாறியிருக்கிறது. தற்போது, பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாகத் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. இந்நிறுவனங்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மக்களின் மனநிலையை அறிந்துகொள்வது மட்டுமின்றி, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்குவதிலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பிம்பத்தைக் கட்டமைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Reuters

அந்தவகையில், இந்தியாவில் உள்ள தேர்தல் வியூக நிறுவனங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வருவதாகவும், சமூக வலைதளப் பதிவுகள் மூலம் வாக்காளர்களின் மனநிலையை மாற்ற முயற்சிக்கப்படுவதாகவும் அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் நிறுவனங்கள், தற்போது கென்யா, தென் அமெரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நேபாளம், இலங்கை எனப் பல்வேறு நாடுகளின் தேர்தல் பரப்புரைகளில் இந்திய ஆலோசகர்கள் பணியாற்றியுள்ளதாக இந்தச் செய்தி தெரிவிக்கிறது.

Indian Consultants Behind US Election Campaign Strategies?
'விளையாட்டு மைதானம் அல்ல மத்திய கிழக்கு..' சீனா warning!

இதற்கு உதாரணமாக, 2022-ம் ஆண்டு கென்யா அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோவுக்கு (William Ruto) ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட சமூக வலைதளப் பிரச்சாரத்தை அல்ஜசீரா சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவைச் சேர்ந்த 22 வயது டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநரான ஒருவர், நாளொன்றுக்கு 7 டாலர் ஊதியத்தில், ரூட்டோவுக்கு ஆதரவான 50 பதிவுகளை உருவாக்கியதாகக் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுகளைத் திரித்து வெளியிடுவது, தவறான தகவல்களுடன் போஸ்டர்களை உருவாக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வில்லியம் ரூட்டோ
வில்லியம் ரூட்டோReuters

இந்தச்சூழலில், இன்று அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலிலும் இதேபோன்ற செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹேலி ஸ்டீவன்ஸுக்கு (Haley Stevens) ஆதரவாக, இந்தியாவிலிருந்து செயல்படும் சமூக வலைதளக் கணக்குகள் பதிவுகளைப் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்த ஆன்டிபாட் 4 நவால்னி (Antibot4Navalny) என்ற ஆய்வுக் குழு, எக்ஸ் தளத்தில் இதுபோன்ற 28 கணக்குகளைக் கண்டறிந்துள்ளது. இவை பகிர்ந்த வீடியோக்கள் 70 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. இதில் குறைந்தது 15 கணக்குகள் இந்தியாவிலிருந்து செயல்பட்டதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும், போலியான அடையாளங்களில் சமூக வலைதளக் கணக்குகளை இயக்குவது, சர்ச்சைக்குரிய தகவல்களை ரகசியப் பக்கங்கள் மூலம் பரப்புவது, வெளிப்படைத்தன்மையற்ற வழிகளில் பணப் பரிவர்த்தனை செய்வது போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹவாலா போன்ற முறைமைகள் மூலம் பணம் கைமாறுவதாகவும் சில அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அரசியல் ஆலோசனைத் துறை தற்போது சர்வதேச அளவில் விரிவடைந்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய தேர்தல் பரப்புரைகள், வாக்காளர்களின் சுயமான முடிவெடுக்கும் உரிமையை பாதிக்கின்றனவா? என்ற கேள்விகள் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

Indian Consultants Behind US Election Campaign Strategies?
ட்ரம்ப்பின் 20 மாத ஆட்சியில் கதிகலங்கிய உலகம்.. கடிவாளம் போடுவார்களா அமெரிக்கர்கள்?