\
Xi Jinping and Sultan Haitham bin Tariq
Xi Jinping and Sultan Haitham bin Tariqreuters

'விளையாட்டு மைதானம் அல்ல மத்திய கிழக்கு..' சீனா warning!

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த சீனா அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
Published on: 
Summary

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த சீனா அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஜி ஜின்பிங் தெரிவித்தார். வல்லரசுகளின் போட்டி மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிசக்தி செலவுகள் உயர்ந்துள்ளன.

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியின் போர்க்களமாக மாறக்கூடாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சீனா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இந்த மோதலால் உலகின் முக்கிய கடல் வழிப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளன.

Xi Jinping and Sultan Haitham bin Tariq
Xi Jinping and Sultan Haitham bin Tariqreuters

சீனாவுக்கு இரண்டு நாள் பயணமாக ஓமன் நாட்டின் மன்னர் ஹைதம் பின் தாரிக் அல் சயீத் சென்றுள்ளார். திங்கள்கிழமை அவரைச் சந்தித்துப் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், உலகம் தற்போது மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியம் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கான களமாக மாறக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பது அனைத்து நாடுகளின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார். போரைக் கட்டுப்படுத்தவும், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (GCC) இடம்பெற்றுள்ள நாடுகள் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்க சீனா விரும்புவதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Xi Jinping and Sultan Haitham bin Tariq
இஸ்ரேலில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி.. எதிர்க்கட்சியுடன் கைக்கோர்க்கும் நெதன்யாகு?