சிங்கப்பூரில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று - அச்சத்தை ஏற்படுத்திய டிசம்பர் முதல் வாரம்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
கொரோனா
கொரோனாட்விட்டர்

2019 இறுதியில், முதலில் சீனாவில் கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவி, லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்தது. இதனால் ஊரடங்குத் தடைகள் பிறப்பிக்கப்பட்டன. மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முதல் அலை, 2வது அலை, 3வது அலை என பரவிய கொரோனாவால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

உலகப் பொருளாதாரமும் முடங்கியது. பின்னர், இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உயிரிழப்புகள் குறையத் தொடங்கின. மேலும், கொரோனா எனும் கோரப்பிடியில் இருந்து மக்கள் விலக ஆரம்பித்து, தற்போது பல நாடுகளில் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். என்றாலும், இன்னும் உலகம் முழுவதும் சில கொரோனா வைரஸ் திரிபுகள் மனிதர்களிடையே பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருகிறது.

சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் மாதத்தில் தற்போதுவரை சுமார் 56,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.

NGMPC22 - 147
(Ministry of Health Singapore https://www.moh.gov.sg/covid-19/statistics )

இதனால், அந்நாட்டில் உடனடியாக லாக்டவுன் அமலுக்கு வருமா எனக் கேள்வியும் எழுந்துள்ளது. டிசம்பர் 3 முதல் 9ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், 56,043 தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது, அதற்கு முந்தைய வாரத்தைவிட 75% அதிகம் எனவும் சுகாதாரத் துறை கூறுகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு 225லிருந்து, 350 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும், 9 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் JN.1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது BA.2.86இன் துணைப் பிரிவு ஆகும். இந்தியாவில் கேரளாவில் இந்த வகை தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று (டிச.19) முதல் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை, வெளியிடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் 2024: நாளை மினி ஏலம்.. அணிகள் தேர்வுசெய்யப் போகும் முக்கிய வீரர்கள் யார், யார்?.. ஒரு பார்வை!

ஜெ.என்-1 வகை கொரோனா கேரளாவில் அதிகமாகப் பரவி வருகிறது. கேரளாவில் நேற்றைய நிலவரப்படி 227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 1,634 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸில் இருந்து புதிய வேரியன்ட் உருமாறியுள்ளது. இதன்பெயர் ஜே.என்.1 வைரஸ் ஆகும்.

இந்த வேரியன்ட் ஆனது முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் லக்சம்பேர்க்கில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, 38 நாடுகளில் இந்த ஜே.என்.1 வைரஸ் பாதிப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு, தலைவலி, சோர்வு இவை அனைத்தும் புதிய கொரோனா வேரியன்ட்டின் முக்கிய அறிகுறிகளாகும்.

இதையும் படிக்க: மும்பை அணியில் இருந்து விலகினாரா சச்சின் டெண்டுல்கர்? உண்மையில் நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com