ஐபிஎல் 2024: நாளை மினி ஏலம்.. அணிகள் தேர்வுசெய்யப் போகும் முக்கிய வீரர்கள் யார், யார்?.. ஒரு பார்வை!

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை (டிச1.19) துபாயில் நடைபெற உள்ளது.
ஐபிஎல்
ஐபிஎல்ட்விட்டர்

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம்

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை (டிச1.19) துபாயில் நடைபெற உள்ளது. முதல்முறையாக இந்த ஏலம் வெளிநாட்டில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்கவுள்ளது.

T10 - BCCI
T10 - BCCIweb

ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், இவர்களில் 116 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் 10 அணிகளுக்காக எடுக்கப்பட உள்ளனர். இதனால் ஒவ்வோர் அணியும் எந்த வீரரை தேர்வு செய்யப் போகிறது என்பது குறித்து இப்போதே விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இதையும் படிக்க: தாவூத் இப்ராகிமிற்கு விஷம்.. வீட்டுக்காவலில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத்? உண்மைஎன்ன?

வீரர்களை வாங்க அணிகள் வைத்துள்ள தொகை

வீரர்களை வாங்க அதிகபட்சமாக,

குஜராத் டைட்டன்ஸ் (ரூ 38.15 கோடி),

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ.34 கோடி),

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ.32.7 கோடி),

சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ 31.4 கோடி),

பஞ்சாப் கிங்ஸ் (ரூ.29.1 கோடி),

டெல்லி கேப்பிடல்ஸ் (ரூ 28.95 கோடி),

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ. 23.25 கோடி),

மும்பை இந்தியன்ஸ் (ரூ.17.75 கோடி),

ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.14.5 கோடி),

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ.13.15 கோடி) ஆகிய ரூபாய் இந்த அணிகள் வசம் உள்ளது. இந்த ஏலத்தில் 3 இந்திய வீரர்கள் (ஹர்ஷல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ) உட்பட 23 வீரர்களின் அடிப்படை விலை அதிகபட்சம் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஹாரி புரூக் (இங்கிலாந்து), ஜெரால்டு கோட்ஜீ (தென்ஆப்பிரிக்கா), முஜீப் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

ஐபிஎல்
ஐபிஎல்file image

மேலும், ஷாருக்கான், எம்.சித்தார்த், சந்தீப் வாரியர், ரித்திக் ஈஸ்வரன், பாபா அபராஜித், பிரதோஷ் பால், அஜிதேஷ், பாபா இந்திரஜித், குர்ஜப்னீத் சிங், ஜதாவேத் சுப்ரமணியன், சூர்யா ஆகிய 11 தமிழ்நாட்டு வீரர்களும் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அதிரடி ஆல்-ரவுண்டர் ஷாருக்கானின் அடிப்படை விலை ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உலகக்கோப்பை தொடரில் அசத்திய வீரர்களான ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கோட்ஜீ, டிராவிஸ் ஹெட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஒரே நாளில் 78: மக்களவையில் திமுக, காங். உள்ளிட்ட 33 பேர், மாநிலங்களவையில் 45 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

அணிகள் ஏலத்தில் எடுக்க இருக்க வீரர்கள்

சிஎஸ்கே அணி தங்களுக்கு இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இரண்டு வீரர்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அம்பத்தி ராயுடுவுக்குப் பதிலாக ஒரு பேட்டரையும், ஒரு பவுலரையும் வாங்கலாம் எனத் தெரிகிறது. அதன்படி, 2020இல் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட், ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், மணீஷ் பாண்டே ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்புதிய தலைமுறை

டெல்லி அணியில் பிரியான்ஷ் ஆர்யா, ஹர்ஷல் படேல், ஷர்துல் தாக்கூர், ஜோஸ் இங்கிலிஸ், வனிந்து ஹசரங்கா, சமீர் ரிஸ்வி மற்றும் ஸ்வஸ்திக் சிக்கரா ஆகிய வீரர்களில் யாராவது ஒருவர் ஏலம் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

குஜராத் அணியில் ஷர்துல் தாக்கூர், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோரில் ஒருவர் ஏலம் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கொல்கத்தா அணிக்கு தற்போது தேவை 2 வேகப்பந்து வீச்சாளர்கள். அந்த வகையில், ஆஸ்திரேலியா மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் , ஜோஸ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: மும்பை அணியில் இருந்து விலகினாரா சச்சின் டெண்டுல்கர்? உண்மையில் நடந்தது என்ன?

உள்நாட்டு வீரர்களைத் தேர்வுசெய்ய ஆர்வம் காட்டும் அணி

லக்னோ அணிக்கும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படுகிறது. இதையடுத்து மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், ஜெரால்ட் கோட்ஸி, நாந்த்ரே பர்கர், தில்ஷன் மதுஷங்கா ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதால், இவர்களில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் குறைந்த அளவே பணம் உள்ளது. இதையடுத்து வனிந்து ஹசரங்கா, மானவ் சுதர், அசுதோஷ் ஷர்மா, தர்ஷன் மிசல் ஆகியோரில் ஒருவரை வாங்க தயாராக இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணி இந்திய வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டுகிறது. அந்த வகையில் ஹர்சல் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பெயர்கள் அடுபடுகின்றன. அதேநேரத்தில் அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டு வீரரும் தேவைப்படுகிறது.

பெங்களூரு அணிக்கு வெளிநாட்டு வீரர்கள் தேவைப்படுவதால், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி மற்றும் மானவ் சுதர் ஆகிய வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல், ரச்சின் ரவீந்திரா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டுகிறது. இதில் ரச்சின் ரவீந்திரா பெயரே முதல் இடத்தில் இருப்பதாகக் காட்டுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்நாட்டு வீரர்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. அந்த வகையில் சமீர் ரிஸ்வி, ஸ்வஸ்திக் சிக்கரா, அசுதோஷ் ஷர்மா, அபிமன்யு சிங், சவுரப் சௌஹான் ஆகிய இளம் வீரர்கள் அவர்களின் பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com