மும்பை அணியில் இருந்து விலகினாரா சச்சின் டெண்டுல்கர்? உண்மையில் நடந்தது என்ன?

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மும்பை அணியில் இருந்து விலகியதாகத் தகவல் பரவியதில் அதன் உண்மைத் தன்மை என்னவென்று பார்ப்போம்.
ஹர்திக், சச்சின்
ஹர்திக், சச்சின்ட்விட்டர்

மும்பை அணியின் அறிவிப்பால் எதிர்ப்பு!

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே, வீரர்கள் தேர்வு மாற்றம், இந்திய ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, ரூ.15 கோடிக்கு மீண்டும் மும்பை அணிக்கு அழைத்து வரப்பட்டார். இது, பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எழவைத்தது. தவிர, அவர் அழைத்து வரப்பட்ட சில நாட்களிலேயே அந்த அணியின் கேப்டனாகவும் ஆக்கப்பட்டார்.

இதுதான் தற்போது பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி, ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா தலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. அது மட்டுமின்றி, ரோகித் தம்முடைய அணியையும் சிதையாமல் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார்.

ஹர்திக், சச்சின்
ரோகித்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த MI! புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு!

வீரர்களும், ரசிகர்களும் விரக்தி பதிவு!

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, எதிர்பார்த்ததைப் போலவே ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டதைப் பொறுத்துக்கொள்ளாத மும்பை மற்றும் ரோகித் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். ரோகித் சர்மா கேப்டன் ஷிப்பில் இருந்து திடீரென இறக்கப்பட்டது சற்று அதிர்ச்சிகர முடிவாக பார்க்கப்பட்டது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அதிரடிகள் எல்லாம் அணிக்குள்ளும் முணுமுணுப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளங்களில் பின்தொடர்வதை நிறுத்துவது என தொடங்கி, அவ்வணி ஜெர்சியை எரிக்கும் அளவிற்குச் சென்றது. தவிர, ரோகித் ஆதரவு வீரர்களும் அவருக்கு எதிராகப் பதிவிடும் அளவுக்குச் சென்றது. ஜஸ்ப்ரித் பும்ரா ஏற்கெனவே விரக்தியில் இருக்கும் நிலையில் சூர்யகுமார் யாதவ், இதயம் உடைக்கும் ஒரு எமோஜி பதிவையும் பதிவிட்டார். அதுபோல், மும்பை கிரிக்கெட் வீரருமான தவால் குல்கர்னியும் ரோகித் சர்மாவிற்காக பதிவிட்டுள்ளார். மேலும், ரோகித் சர்மா ஆதரவு வீரர்கள்கூட, மும்பை அணியில் இருந்து வெளியேறிகிறார்கள் என்றுகூட தகவல்கள் வந்தன.

ஹர்திக், சச்சின்
ரோகித் சர்மாவிற்காக எமோசனல் பதிவிட்ட சூர்யகுமார் யாதவ், தவால் குல்கர்னி! உடையும் மும்பை இந்தியன்ஸ்?

மும்பை அணியிலிருந்து விலகினாரா சச்சின்?

இந்த நிலையில், கேப்டன்சி மாற்றம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் கசிந்தன. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் (Mentor) பொறுப்பில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகியதாக செய்திகள் பரவின.

எனினும் இந்த விஷயத்தில் மும்பை அணி நிர்வாகம், இதை மறுக்கும் விதமாகவும், அதேசமயத்தில் நேரடியாக பதில் அளிக்காமலும், சச்சின் அணியில் தொடர்கிறார் என்பதை காட்டும் வகையில், ’சச்சின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் நிறைவடைகிறது’ என ஒரு வாழ்த்துப் பதிவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதிலிருந்து சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகவில்லை என்பது தெரிய வருகிறது. இதன்மூலம் சச்சின் விலகல் குறித்த செய்தி வதந்தி எனத் தெரிகிறது.

சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருக்கிறார். அவர் ஐபிஎல் 2008 முதல் 2011 வரை மும்பை அணியின் கேப்டனாக இருந்தார். 2012, 2013ஆம் ஆண்டுகளில் அவர் பேட்டராக அணியில் நீடித்தார். 2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தாவூத் இப்ராகிமிற்கு விஷம்.. வீட்டுக்காவலில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத்? உண்மைஎன்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com