லண்டனில் ரூ.1.70 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் உருவப்படம்..!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உருவப்படம் ஒன்று லண்டனில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து எண்ணூறு யூரோவுக்கு ஏலம் போனது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்ற போது புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் கிளேர் லெய்டான்ஸ் என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டது.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் உருவப்படம் 1.70 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது ஆன்லைன் விற்பனையில் அதிகம் விற்பனையான பொருளாக சொல்லப்படுகிறது.. பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லைட்டனால் வரையப்பட்ட இந்த ஓவியம், காந்தி உட்கார்ந்திருக்கும் போது போஸ் கொடுத்த ஒரே படம் என்று நம்பப்படுகிறது. லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் இந்த ஓவியம் ஏலம் விடப்பட்டது. ரூ.1.70 கோடிக்கு ஏலம் போன இந்த ஓவியம், அதன் மதிப்பீட்டை விட மூன்று மடங்கு அதிகம் என சொல்லப்படுகிறது..
கிளேர் லைட்டனால் 1931 ஆம் ஆண்டு இந்த ஓவியம் வரையப்பட்டது. இது காந்தியின் உருவப்படம் மட்டும் அல்ல, அவர் உட்கார்ந்திருக்கும் ஒரே ஆயில் பெயிண்டிங் என்றும் கருதப்படுகிறது. இது குறித்து போன்ஹாம்ஸ் விற்பனைத் தலைவரான ரியானான் டெமெரி கூறுகையில், ”இந்த சிறந்த கலைப்படைப்பு இதற்கு முன்பு ஒருபோதும் ஏலத்தில் விடப்பட்டதில்லை என்றும், தொலைதூர மக்களுடன் மகாத்மா காந்தி எப்போதும் இணைந்து இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்றாகும்” என்றார்.
மேலும், "1989 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இந்த உருவப்படம் கலைஞரின் சேகரிப்பில் இருந்தது, அதன் பிறகு அது அவரது குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வேலை உலகம் முழுவதும் இவ்வளவு ஆர்வத்தைத் தூண்டியதில் ஆச்சரியமில்லை" என்று திருமதி டெமெரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார் .
1974 ஆம் ஆண்டு, பொது கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தபோது, அந்த உருவப்படம் கத்தியால் தாக்கப்பட்டது . ஓவியக் கலைஞரின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, ஒரு இந்து வலதுசாரி தீவிரவாதி, கலைப்படைப்பை சேதப்படுத்த கத்தியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் பல இடங்களை பழுதுபார்க்க வேண்டியதாக இருக்கும் என்றனர். மேலும் அதன் பின்புறத்தில் காந்தியின் தனிச் செயலாளர் மகாதேவ் தேசாய் எழுதிய கடிதம் உள்ளது, அதில் காந்தியின் ஒற்றுமையைப் பாராட்டி, காந்தியின் நன்றியை மீண்டும் வலியுறுத்துகிறார்..