பூமி வேகமாக சுற்றுவது ஆபத்தா.. டிஜிட்டல் உலகை பாதிக்குமா? த.வி.வெங்கடேஸ்வரன் பகிர்ந்த முக்கிய தகவல்!
பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால், நமக்கும் இரவு பகல் மாறி மாறி வருகிறது.. பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரமாகும். இது ஒரு நாள் என கணக்கிடப்படுகிறது.... அதே போல் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகும்.. இந்நிலையில் பூமியை பற்றி ஒரு ஆச்சர்யமான விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.. ஆம்.. பூமி இயல்பை விட வேகமாகச் சுழன்று வருகிறது.கடந்த ஜூலை 9ஆம் தேதி வேகமாக சுற்றியது. அதேபோலவே ஜூலை 22ஆம் தேதியும், ஆகஸ்ட் 6ஆம் தேதியும் பூமி வேகமாக சுற்றும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஒரு நாளில் சில மில்லி விநாடிகள் குறைகின்றன. இந்த இழப்புகள் சிறியதாகத் தோன்றினாலும், நம் நேர கட்டுப்பாட்டில் சில பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. அப்படி பூமி வேகமாக சுற்றுவது குறித்து த.வி. வெங்கடேஸ்வரனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.. அதற்கு புதிய தலைமுறைக்கு அவர் கொடுத்த பிரத்யேக போட்டியில் என்ன கூறுகிறார் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
பூமி வேகமாக சுற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,
பூமி சுற்றுவதில் தினமும் சில வேறுபாடுகள் இருக்கும். எல்லா நாட்களும் ஒரே மாதிரியே சுற்றாது. அதன் காலநிலை கொஞ்சம் கூட குறையதான் இருக்கும் . அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.. அதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது, நிலநடுக்கம் ஏற்படுதல், நிலா இருக்கும் திசை மற்றும் அதன் தூரம், நிலா, பூமி சூரியன் இருக்கும் நிலைகளை பொறுத்தே இது மாறுபடும். இதற்கு காரணம் பூமியை போலவே நிலா, சூரியன் மற்றும் மற்ற கிரகங்கள் அனைத்திற்கும் ஈர்ப்புவிசை உள்ளது. அதனால் எல்லா கிரகங்களும் அதன் நிலைகளை மாற்றிக்கொண்டேதான் இருக்கும்.. அப்படி அதன் நிலைகள் மாறும்போது பூமியில் அதன் தாக்கம் ஏற்படும். அதனால் பூமி ஒவ்வொருநாளும் தனது காலநிலையில் கொஞ்சம் கூடவும் குறையவும் இருக்கும் என தெரிவித்தார்..
நில நடுக்கம் ஏற்படும்போது பூமி சற்று தாமதமாக சுற்றுகிறதே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,
நிலநடுக்கம் ஏற்படும்போது பூமி சற்று வேகம் குறைந்து சுற்றும். உதாரணமாக அலுவலகங்களில் உள்ள நாற்காலிகளில் நான்கு சக்கரங்கள் இருக்கும்.. அதில் அமர்ந்துக் கொண்டு நாற்காலியை சுற்றிவிட்டால் அது வேகமாக சுற்றும் அல்லவா, அந்த சமயத்தில் திடிரென அமர்ந்திருப்பவர் தனது கைகளை விரித்து காட்டினால் அதன் வேகம் குறையும். அதே நேரத்தில் கைகளை குறுக்கி வைத்துக் கொண்டால் அதன் வேகம் அதிகரிக்கும்.. அதுபோலவே நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் பூமி பிளந்துக் கொண்டு விரிவடையும். அப்போது அதன் சுற்றும் வேகம் சற்று குறையும்.. இதனால் அதன் காலநிலையில் கொஞ்சம் மாறுபாடு ஏற்படக்கூடும் என்றார்..
அதனை தொடர்ந்து பேசியவர்,
நிலநடுக்கம் மற்றும் எரிமலை ஏற்படும் நேரங்களில் பூமியின் அளவும் மாறுபடுகிறது.. அதில் முக்கியமாக வட துருவங்கள் தென் துருவங்கள் உள்ள பகுதிகளில் பனிகட்டிகள் அதிகமாக இருக்கும்.. அந்த பனிகட்டிகள் கட்டிகளாகவே இருக்கும்போது பூமியின் அளவு குறைவாகவும் அது உருகி தண்ணீராக மாறும்போது அதன் அளவு அதிகமாகவும் இருக்கும்.. இதனால் பூமியின் சுழற்சியில் சில மாறுபாடுகள் ஏற்படும் என்றார்..
காலநிலை அளவில் உள்ள ஒரு மில்லி செகண்ட் என்பது என்ன என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
ஒரு மில்லி செகண்ட் என்பது ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்காகும். கடந்த ஜூலை 9ஆம் தேதி நடந்தது 1.38மில்லி செகண்ட் குறைவாக இருந்தது. பொதுவாக நாம் கண் இமைக்கவே 100 செகண்ட் தேவைப்படுகிறது.. அப்படி பார்த்தால் இது அதைவிட மிக குறைவாகதான் உள்ளது. அதனால் மனிதர்களாகிய நமக்கு இந்த மாற்றம் பெரிய விஷயமாக தெரியாது.. ஆனால் இது டிஜிட்டல் உலகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஜிபிஎஸ் மாதிரியான வழிதட செயலிகளில் இது முகியமான ஒன்று. காரணம் விண்ணில் இருக்கும் செயற்கை கோளை பயன்படுத்தி பூமியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் நமக்கு கணக்கிட்டு சொல்லுகிறது.. அதன் செயல்பாட்டில் இருந்து பார்த்தால் நிலநடுக்கம் ஏற்பட்டால் பூமி ஒரு செகண்ட்க்கு 66சென்டி மீட்டர் நகர்கிறது.. அதனால் பூமியின் அளவு மாறுபட்டு அந்த டிஜிட்டல் செயலியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றார்..
மேலும் பேசியவர்,
ஜிபிஎஸ் போன்ற செயலிகள் மிக துல்லியமாக செயல்பட நேரம் கணக்கிடல் தேவைப்படுகிறது.. விஞ்ஞானிகள் விண்கல் அனுப்பும்போது அதில் ஸ்பீடோ மீட்டர் இருக்காது அப்போ நேரம்தான் பார்க்கப்படுகிறது.. அதனால் சில மில்லி செகண்ட்களை நேரம் மிக துல்லியமாக கணக்கிட்டு சொல்லுகிறது.. அதேபோல டிஜிட்டலின் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படும் கணினி மற்றும் இணைய சேவைகளில் இது மாற்றம் கொடுக்கும்.. அதில் ஒவ்வொரு தகவல்களும் ஒரு சின்ன சின்ன பொட்டலமாக கொடுக்கப்படுகிறது..
அதில் கண்டிப்பாக மில்லி செகண்ட் கணக்கில் டைம் ஸ்லாட் இருக்கும்.. பொதுவாக ஒரு இமெயில் அனுப்பினாலேயே சரியான நேரம் என்ன என்பதை அது சொல்லிவிடும்.. ஏடிஎம்-ல் பணம் எடுத்தாலும் அதில் சரியான நேரம் இருக்கும்.. அதனால் இது டிஜிட்டல் உலகில் மாற்றத்தை கொடுக்கும். ஆனால் மனிதன் வாழும் சமூக வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் தெரியாது என்று கூறினார்..
மிக குறைவான நாட்கள் ஜூலை மற்றும் ஆகஸ்டில் வரும் என்கிறார்களே அது எப்படி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,
மிக குறைவாக என்றேல்லாம் ஒன்றும் இல்லை, கடந்த 2024ஆம் ஆண்டு இதுபோலவே குறைவான நாள் ஒன்று வந்தது.. அதுபோலவே இந்த வருடம் (2025) 1.38 மில்லி செகண்ட் குறைவான நாள் கடந்த ஜூலை 9ஆம் தேதி வந்தது.. இதேபோலவே ஜூலை 22ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 6ஆம் தேதிகளும் குறைவான நாட்களாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர் என தெரிவித்தார்..
இந்த கணக்கீட்டை எப்படி கணிக்கின்றனர் என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
இந்த கணக்கீட்டின் காரணம் நிலாவுடைய நிலைதான்.. நிலா எல்லா நாளும் கிழக்கில் உதிக்காது..சில நேரம் வடக்கிழக்கிலும் சில நேரங்களில் தென் கிழக்கிலும் உதிக்கும். இதில் மிக தொலைவாக வடக்கிழக்கிலும் அல்லது மிக தொலைவாக தென்கிழக்கிலும் உதிக்கும் சமயத்தில் நிலா நிலநடுக் கோட்டிற்கு மேலையோ அல்லது கீழையோ இருக்கும்.. அது பூமியின் சுழற்சிக்கு அருகில் இருப்பது ஆகும். அதாவது பூமி சுற்றும் வட துருவம் மற்றும் தெம்துருவத்தின் அருகில் இருப்பது ஆகும்.. அந்த சமயத்தில் நிலா பூமியின் சுழலும் தன்மையை கவரும்.. அதனால் பூமி வேகமாக சுழல ஆரம்பிக்கும்.. அதனால் அன்றைய தினத்தின் காலநிலை குறைவாக இருக்கும் என்றார்..