இம்ரான் கான்
இம்ரான் கான்ட்விட்டர்

“என் மனைவி உணவில் டாய்லெட் கிளீனர்” - குற்றஞ்சாட்டிய இம்ரான் கான்; பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

தனது மனைவி புஸ்ரா பீவிக்கு, உணவில் டாய்லெட் கிளீனர் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, ஆட்சி அமைத்துள்ளன. அதன்படி, நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். அதுபோல், முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்று உள்ளார்.

முன்னதாக, பொதுத் தேர்தலில் இம்ரான் கட்சி போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டபோதும், அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக 93 இடங்களில் வெற்றிபெற்றிருந்தனர். இது, நவாஸ் ஷெரீப் கட்சி வென்ற இடங்களைவிட (75) அதிகம். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய மனைவி புஸ்ரா பீவிக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் மற்றும் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

இம்ரான் கான்
“பாகிஸ்தானுக்கும் இலங்கை நிலை உருவாகும்” - இம்ரான் கான்

இந்த நிலையில், தனது மனைவி புஸ்ரா பீவிக்கு, உணவில் டாய்லெட் கிளீனர் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் முகநூல்

அப்போது அவர், “எனது மனைவிக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த உணவால் அவர் தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை மேலும் நலிவடைந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ!

இம்ரான் கான்
பாகி. அதிபர் தேர்தல்: சர்தாரியை எதிர்த்து களமிறங்கும் மக்மூத் கான்.. ஆதரவளித்த இம்ரான் கான்!

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், “அடியாலா கிளை சிறையில் எனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளங்கள் அவரது தோளில் இருந்தன. நாக்கில் விஷத்தின் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பேற்க வேண்டும். என் மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. புஷ்ராவுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல் அவரது மனைவி புஸ்ரா பீவி, “எனக்கு உணவில் டாய்லெட் கிளீனரைக் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் உடல்நிலை மோசமடைந்தது. என் கண்கள் வீங்குகின்றன. மார்பு, வயிற்றில் வலியை உணர்கிறேன். உணவும், தண்ணீரும் கசப்பாக இருக்கிறது. முன்பு தேனில் சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கலந்திருந்தன. தற்போது கழிப்பறையைச் சுத்தப்படுத்தும் கிளீனர் எனது உணவில் கலக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

இம்ரான் கான்
அவசரமாக கடிதம் எழுதிய இம்ரான் கான்... பாகி. கூட்டணி ஆட்சியை ஆதரித்த IMF!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com