பாகி. அதிபர் தேர்தல்: சர்தாரியை எதிர்த்து களமிறங்கும் மக்மூத் கான்.. ஆதரவளித்த இம்ரான் கான்!

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரியை எதிர்த்துப் போட்டியிடும் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத் கான் அஷ்காஸுக்கு இம்ரான் கான் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அஷ்காஸ், சர்தாரி
அஷ்காஸ், சர்தாரிட்விட்டர்

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இதில், இம்ரான் கான் ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களில் வெற்றிபெற்று 2வது இடத்தையும், 54 இடங்களில் வெற்றிபெற்ற பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 3வது இடத்தையும் பிடித்தன. இதுதவிர, முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் 17 இடங்களையும், வேறு சில சிறிய கட்சிகள் 17 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.

அஷ்காஸ், சர்தாரி
'நன்றி PIA' - கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான பாகிஸ்தான் விமான பணிப்பெண்.. தொடரும் சோகம்!

எனினும், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணி அரசை அமைப்பதில் ஒப்புக்கொண்டுள்ளன.

அந்த வகையில், முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி நாட்டின் புதிய அதிபராகவும் வரக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்கேற்ப இருவரையும் அதற்கான வேட்பாளராக பிலாவல் பூட்டோ உறுதிப்படுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் முகநூல்

இதனிடையே பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் தேர்தல் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து அங்கு புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரிக்குப் போட்டியாக, எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத் கான் அஷ்காஸ் போட்டியிட உள்ளார். இவருக்கு இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com