israel - gaza war
israel - gaza warfile image

இஸ்ரேல் அட்டூழியம்.. நரகமாக மாறும் காஸா.. நெஞ்சை உருக்கும் இளம்பெண்ணின் வீடியோ

“இங்கு இருக்கும் சூழல் மிகவும் மோசமானதாக உள்ளது. அடுத்ததாக நான் கூட இந்த தாக்குதலில் உயிரிழக்கலாம்” என்று உருக்கமாக கவலை தெரிவித்துள்ளார் காஸாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
Published on

ஹமாஸ் - இஸ்ரேல் ராணுவம் இடையே கடந்த 18 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் கோர தாக்குதலால், காஸாவின் வடக்கு பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். காஸாவில் இதுவரை 4,500க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான நிலையில், கோர தாக்குதலால் உயிர்பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

israel - gaza war
"இந்தியாவுக்கும் இதே நிலை ஏற்படும்" எச்சரித்த இஸ்ரேல் அமைச்சர் - பின்னணி என்ன?

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தால் தாங்கள் வெளியேற்றப்பட்டது குறித்து காஸாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ காண்போரை கலங்கவைத்துள்ளது. அந்த வீடியோவில், “காஸாவின் டல் அவ் ஹவாவில் வசித்து வந்த நாங்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டோம். நல்ல வேளையாக என்னுடைய நாயை காப்பாற்றிவிட்டேன். எங்களது வீடு பறிபோய்விட்டது, அம்மாவின் வேலையும் பறிபோகியுள்ளது.

வெளியேற்றப்பட்ட நிலையில், அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு சாப்பிட உணவு இல்லை, மின்சாரம் இல்லை, கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை அடுத்ததாக நான் கூட உயிரிழக்கலாம். எப்படியானாலும் இது எங்கள் மண் தான். நதி முதல் கடல் வரை எங்களுடையதுதான். இதை மறந்துவிடக்கூடாது” என்று பேசியுள்ளார்.

israel - gaza war
FACTCHECK | “சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆயுதங்களை பயன்படுத்தலாம்..” கிரெட்டாவின் வைரல் வீடியோ உண்மையா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com