"இந்தியாவுக்கும் இதே நிலை ஏற்படும்" எச்சரித்த இஸ்ரேல் அமைச்சர் - பின்னணி என்ன?

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் துணை நிற்காவிட்டால் நாளை இதே நிலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்படக்கூடும் என இஸ்ரேல் அமைச்சர் ஓஃபிர் அகுனிஸ் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் அமைச்சர் ஓஃபிர் அகுனிஸ்
இஸ்ரேல் அமைச்சர் ஓஃபிர் அகுனிஸ்file image

இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் டெல் அவிவ் சென்று தங்களுடைய ஆதரவை நேரில் தெரிவித்தனர்.

இஸ்ரேல் அமைச்சர் ஓஃபிர் அகுனிஸ்
இஸ்ரேல்-காஸா போர்: மனிதாபிமான இடைநிறுத்த தீர்மானம்.. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்த அமெரிக்கா!

இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் குடிமக்களை இமானுவேல் மேக்ரோன் சந்தித்தார். இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய மேக்ரோன், "இஸ்ரேல்மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது. இஸ்ரேல், பிரான்ஸ் நாடுகளுக்குப் பயங்கரவாதம்தான் பொது எதிரி” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதல்

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஸ்ரேல் அமைச்சர் ஓஃபிர் அகுனிஸ், “ஹமாஸ் அமைப்புடன் இறுதிக்கட்ட போரில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த போரில் உலக நாடுகள் எங்களுக்கு ஆதரவாகத் துணை நிற்கவேண்டும். எங்களுக்கு இந்த நேரத்தில் துணை நின்றால் உங்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படும் போது கண்டிப்பாக இஸ்ரேல் ராணுவம் துணை நிற்கும். எங்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டால், இதே போன்ற நிலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்படக்கூடும்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com