ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ் அதிபர்
ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ் அதிபர்web

மாபெரும் தவறு செய்த ஹிஸ்புல்லா.. கொல்லப்பட்ட பிரான்ஸ் வீரர்! கொதித்தெழுந்த பிரான்ஸ் அதிபர்!

லெபனானில் ஆயுதப்படை நடத்திய தாக்குதலில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய பிரான்ஸ் வீரர் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

லெபனானில் ஐ.நா அமைதி படையில் பணியாற்றிய பிரான்ஸ் வீரர் புளோரியன் மாண்டோரியோ, தெற்கு லெபனானின் தீர் கிஃபா பகுதியில் சாலைப் பணியில் இருந்தபோது ஆயுதக் குழுவின் திடீர் தாக்குதலில் உயிரிழந்தார்; மேலும் மூன்று பிரான்ஸ் வீரர்கள் காயமடைந்தனர்.

1978-ம் ஆண்டு லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெற்றது. இதன் பின்னர் அந்தப் பகுதியில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நிறைவேற்றி, அங்கு ஐ.நா வின் அமைதி படைகளை அனுப்பியது.

அப்போதில் இருந்து தற்போது வரை லெபனானில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐ.நாவின் அமைதி படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த படையினர் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, இரு நாடுகளின் ராணுவமும் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி வராமல் பார்த்துக் கொள்கிறது.

இந்த சூழலில் ஐ.நா படையில் பணியாற்றிய பிரான்ஸின் மாண்டோபனைச் சேர்ந்த 17-வது பாராசூட் இன்ஜினியர் படைப்பிரிவைச் சேர்ந்த புளோரியன் மாண்டோரியோ (Florian Montorio) என்ற வீரர் அங்கு ஆயுத படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ் அதிபர்
அமெரிக்காவா.. ஈரானா? ஈகோ போட்டியில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு.. நிலைமை என்ன?

தெற்கு லெபனானில் உள்ள தீர் கிஃபா (Deir Kifa) பகுதியில், ஒரு பாதையைச் சீரமைக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்தபோது இவர்களது படை மீது ஆயுதமேந்திய குழுவினர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதில் துப்பாக்கித் தோட்டாக்கள் உடம்பில் பாய்ந்து அவர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல இந்த தாக்குதலில் மேலும் மூன்று பிரான்ஸ் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரான், இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு லெபனான் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ் அதிபர்
ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. 2 வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு.. அதிகரிக்கும் பதற்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com