firing on 2 indian vessels in strait of hormuz
model imageai

அமெரிக்காவா.. ஈரானா? ஈகோ போட்டியில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு.. நிலைமை என்ன?

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் பதற்றம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. அதிலும் குறிப்பாக, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
Published on

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த 2 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியானது. அது, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் அல்லது இந்திய திசை நோக்கிச் சென்ற கப்பல்கள் என தெரிய வந்துள்ளது.

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்தது. அனைத்து வணிகக் கப்பல்களும் செல்லலாம் எனவும் தெரிவித்திருந்தது. இந்த சூழலில்தான், ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியைச் சுற்றியுள்ள சர்வதேசக் கடல்பகுதியில் அமெரிக்கா முற்றுகையிட்டிருக்கும் நிலையில், ஹார்முஸ் திறக்கப்பட்டதையடுத்து முற்றுகையை கைவிட வேண்டும் என அமெரிக்காவை ஈரான் எச்சரித்தது. எனினும், ஈரானுடனான ஒப்பந்தம் கையெழுத்திடும்வரை முற்றுகை தொடரும் என ட்ரம்ப் அறிவித்ததையடுத்து எதிர்பாராத விதமாக இன்று மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடி ஈரான் உத்தரவிட்டிருக்கிறது. இது, உலகநாடுகளிடையே எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

model image
model imagegoogle gemeni

இந்த சூழலில், இன்று ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த 2 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியானது. அது, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் அல்லது இந்திய திசை நோக்கிச் சென்ற கப்பல்கள் என தெரிய வந்துள்ளது. இதுவரை அந்தக் கப்பல்களுக்கு எந்தச் சேதமோ, மாலுமிகளுக்கோ உயிரிழ்ப்போ ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், இந்த துயர சம்பவம் தொடர்பாக இந்தியா தனது கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் தூதரிடம் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை விரைவில் மீண்டும் தொடங்குமாறு ஈரான் தரப்பை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் கவலைகள் தெஹ்ரானில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று ஈரான் தூதர் உறுதியளித்தார். இதையடுத்து, கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அப்பகுதியில் இயங்கும் இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான ஈகோ போட்டியில் 2 இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது உலக அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

firing on 2 indian vessels in strait of hormuz
ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. 2 வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு.. அதிகரிக்கும் பதற்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com