ரூ.2,900 கோடி அபராதம்.. 3 ஆண்டுகள் தடை.. அடிமேல் அடி வாங்கும் ட்ரம்ப்.. தேர்தலில் பின்னடைவா?

சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட ட்ரம்ப்புக்கு, இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்
ட்ரம்ப்ட்விட்டர்

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் ஜோ பைடன், ட்ரம்பை எதிர்த்து மீண்டும் நிற்கிறார். இந்த நிலையில், ட்ரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டது மற்றும் பதவிக்காலத்தின்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்புதிய தலைமுறை

இது ஒருபுறமிருக்க, கடந்த சில வருடங்களாக நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட ட்ரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முழுவதுமாக முடிந்து தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. நீதிபதி ஆர்தர் எங்கோரோன் கூறிய தீர்ப்பில், சொத்துக்குவிப்பு வழக்கில், டொனால்ட் ட்ரம்ப் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரம்ப் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமைப் பொறுப்பில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் இந்த குற்றச்சாட்டை முழுதாக மறுத்துள்ளார். டிரம்ப் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் மேல்முறையீடு செல்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் , இது என் மீதான பொய்யாக கூறிய வழக்கு என்றும் இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ’ரஷ்ய தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும்’ - மீண்டும் வலியுறுத்திய புதின்!

முன்னதாக, அமெரிக்க பத்திரிகையாளரான ஜீன் கரோல் என்பவர் டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். கடந்த மாத இறுதியில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு ட்ரம்ப் 83.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 692 கோடி ரூபாய்) வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதைவிட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க ட்ரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கிலும் அவர் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னேறி வந்த ட்ரம்புக்கு, இந்த தீர்ப்பு பின்னடைவைத் தரலாம் எனக் கருதப்படுகிறது.

ட்ரம்ப்
பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கு: டொனால்டு ட்ரம்ப் 83.3 மில்லியன் டாலர் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com