\
alien
alienReuters

பூமியில் பல்லி மனிதர்கள்? ஏலியன்கள் இருப்பது உண்மையா? ஏரியா 51-ல் என்னதான் நடக்கிறது?

Area 51-ல் ரகசிய தளத்தில் என்னதான் நடக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.
Published on: 
Summary

1955 முதல் அமெரிக்காவின் ரகசிய விமான சோதனை தளமாக உள்ள ஏரியா 51, ஏலியன்கள் தொடர்பான வதந்திகளால் சூழப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர் நிக் பெட்ஸ் கூறிய தகவல்கள், இந்த தளத்தின் மர்மத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

செய்தியாளர் - கார்த்திகேயன்

இந்த பேரண்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிரகத்திலாவது ஏலியன்கள் இருக்க 90 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாகவே, விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அது, சினிமாவில் காட்டுவது போன்ற மிகவும் பிரம்மாண்டமான, அதிநவீனமான ஏலியன்களாக இல்லாமல் ஒரு சிறு பாக்டீரியாவாக கூட இருக்கலாம். விஞ்ஞானிகளை இந்த கூற்றை வைத்து, ஹாலிவுட் முதல் இந்தியா சினிமா வரை பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. மேலும், அமெரிக்காவில் உள்ள ரகசிய ராணுவ தளமான ஏரியா 51-ல் ஏலியன்கள் இருக்கிறது. அங்கு வைத்து தான் அமெரிக்கா விஞ்ஞானிகள் அதனை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்று, பல்வேறு சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரே, அங்கு ஏலியன்கள் இருக்கிறது என்று கூறியுள்ள கருத்து, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அமெரிக்க ராணுவத்தில் ஸ்னைப்பராக பணியாற்றி வந்தவர் தான் நிக் பெட்ஸ். இவர் தற்போது லிபர்ட்டி ரிஸ்க் என்ற YouTube சேனலின் இணை தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் எபிசோட் ஒன்றில் பேசும்போது, நெவாடா மாகாணத்தில் உள்ள ரகசிய தளம் ஒன்றில், பல்லி போன்ற தோற்றமளிக்கும் உயிரினங்கள் இருந்தது. அதனை அழிப்பதற்காக ராணுவ வீரர்கள் சென்றார்கள். அங்கு நடந்த மோதலில், ஒரு அமெரிக்க வீரர் இறந்துவிட்டதோடு, 3 பல்லி மனிதர்கள் இறந்து போனார்கள்.

area 51
area 51reuters
alien
வெள்ளை மாளிகை சாம்பலாகும்.. டிரம்பை அதிரவைத்த ஈரானின் பதிலடி!

இறந்துபோன வீரரின் உடல், அந்த இடத்திலேயே எரிக்கப்பட்டு, அது விபத்து போல மறைக்கப்பட்டது என்று, அமெரிக்க ராணுவத்தின் JSOC பிரிவை சேர்ந்த நபர், தன்னிடம் கூறியதாக, நிக் பெட்ஸ் கூறியுள்ளார். நிக் பெட்ஸ் இந்த தகவலை, கடந்த 2025 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் வெளியான எபிசோடில் கூறியிருந்தாலும், இந்த தகவல் தற்போது நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. தி டெய்லி மெயில், வியான் போன்ற பல்வேறு பிரபல ஊடக நிறுவனங்களும், இந்த செய்தியை தற்போது வெளியிட்டு வருகின்றன. ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது எப்போதும் சலித்துப் போகாதா ஒரு கேள்வி. இல்லையென்று ஆயிரம் ஆதாரங்களை கொடுத்தாலும், இருக்கு என்று சொல்லும் ஒருசில நம்பிக்கைகளுக்கே அதிக வலிமை உண்டு. அந்த வலிமையில் தான், தற்போதும் நிக் பெட்ஸின் இந்த வீடியோ கவனம் பெற்று வைரலாகி.

பல்வேறு இணைய ஆதாரங்களை புரட்டியதில், ஏரியா 51 என்பது உண்மையில் என்னவாக உள்ளது என்றும், ஏன் அந்த பகுதி மர்மமாக உள்ளது என்றும் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், 1955-ஆம் ஆண்டு முதல், ஏரியா 51 என்பது அமெரிக்காவின் ரகசிய விமான சோதனை தளமாக உள்ளது. உளவு விமானங்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள், புதிய ஆயுதங்கள் போன்றவற்றை பரிசோதனை செய்ய, இந்த தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2013-ஆம் ஆண்டு தான், இது தங்களுக்கு சொந்தமான இடம் என்பதை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு ஒப்புக்கொண்டது. இதனை ரகசியமாக வைத்துக் கொள்ளவே, இந்த ஏலியன் வதந்திகளை அவர்கள் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, தற்போதைய சூழலில், பூமியில் ஏலியன்கள் இல்லை என்பதற்கு தான், ஆதாரம் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

alien
சாபத்தை போக்கிய நெல்சன்.. இமாலய வசூலை தொடுகிறதா ஜெயிலர் 2? ட்ரோலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com