\
white house - trump
white house - trumpani / reuters

வெள்ளை மாளிகை சாம்பலாகும்.. டிரம்பை அதிரவைத்த ஈரானின் பதிலடி!

அமெரிக்கா-ஈரான் போர்: வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி எச்சரிக்கையில் ஈரான்!
Published on: 
Summary

அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், வெள்ளை மாளிகை உட்பட அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் நட்பு நாடுகள் ஈரானின் கடுமையான பதிலடிக்கான இலக்குகளாக மாறும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் 2026 பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரமடைந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய கருத்து வேறுபாடுகள் நீடிப்பதால் பதற்றம் தொடர்கிறது.

7 மாதங்களை கடந்தும் தொடரும் போரில் பல்வேறு அழுத்தங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து, ஈரானை தனது வழிக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இப்படியான சூழ்நிலையில், ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, வெடி குண்டுகளுக்கெல்லாம் தாய் என்று அழைக்கப்படும் குண்டை, அமெரிக்கா பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது .

Mother of all Bombs
Mother of all BombsReuters

அதாவது, GBU-43/B MOAB என்ற வெடி குண்டு தான், இருக்கும் குண்டுகளுக்கெல்லாம் தாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெடிகுண்டை, ஈரானின் ஆற்றல் கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது, அமெரிக்க ராணுவம் பயன்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் நேரடிப் போர் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டால், சுமார் 9.8 டன் எடையுள்ள இந்த அபாயகரமான வெடிகுண்டை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு வருவதாக CNN செய்தி வெளியிட்டது.

இந்தக் குண்டு 2017-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ISIS அமைப்பின் கிளையான ISIS-K பயன்படுத்திய குகைகள் மற்றும் சுரங்கப் பாதைகளைத் தாக்குவதற்காக ஒருமுறை பயன்படுத்தப்பட்டது.

இந்தக் குண்டின் அழிக்கும் திறன் மிக அதிகமாக இருந்தாலும், ஈரானின் நிலத்துக்கு அடியில் ஆழமாக அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதலை நடத்தினால், அதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவத் தளங்கள், அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மட்டுமின்றி, வெள்ளை மாளிகையையும் அழிப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

White House
White House Reuters

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவரான அப்பாஸ் முக்தாய், அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களைப் போன்ற அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கான பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

ஈரானின் நாடாளுமன்ற செய்தி நிறுவனமான ICANA-விடம் பேசிய அவர், அமெரிக்காவின் ராணுவ வீரர்கள், ராணுவத் தளங்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஈரானின் பதிலடிக்கான இலக்குகளாக மாறும் என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்கா இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினால், வெள்ளை மாளிகை ‘கருப்பு மாளிகையாக’ மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் கடுமையான அரசியல் மற்றும் ராணுவ எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

white house - trump
உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?? Doomsday பனிப்பாறை குறித்து வெளியான புதிய தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com