\
elon musk
elon muskreuters

அம்பானி தான் முதலாளியா? நேரடியாக தாக்கிய எலான் மஸ்க்! பாஜக அரசுக்கு கேள்வி!

அம்பானி தான் இந்தியாவின் முதலாளியா? என்று அமெரிக்க தொழிலபதிபர் எலான் மஸ்க் கேள்வி எழுப்பி, விமர்சித்திருக்கிறார்.
Published on: 
Summary

165 நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை கிடைக்க, இந்தியாவில் மட்டும் உரிமம் வழங்கப்படவில்லை என எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார். அம்பானி மற்றும் பாஜக அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், இந்திய பாதுகாப்பு காரணமாக சேவை அனுமதிக்கப்படவில்லை என அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் தான் எலான் மஸ்க். அமெரிக்காவை சேர்ந்த இவர், ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும், ஒரு திட்டம் தான் ஸ்டார்லிங்க். பாராம்பரிய செயற்கைக்கோள் இணைய வசதி போல் இல்லாமல், புவியின் குறைந்த சுற்றுப்பாதையில் பறக்கும் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களின் வலை அமைப்பை பயன்படுத்தி, குக்கிராமங்களுக்கும் இன்டர்நெட்டை வழங்க முடியும். தற்போது உலக அளவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் பயன்பாட்டில் இருப்பதால், மிக வேகமாகவும் இணைய வசதியை பெற முடியும்.

தற்போது, பல்வேறு நாடுகளில் இந்த இணைய வசதி பயன்பாட்டில் இருக்கும் நிலையில், தற்போது வரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, தனது அதிருப்தியை எலான் மஸ்க் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், இந்த முறை இந்திய தொழிலதிபர் அம்பானியை நேரடியாக குறிப்பிட்டு, அவர் முன்வைத்த விமர்சனம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனது எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்டார்லிங்க் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில், உரிமத்தை பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் உரிமம் பெற முடியவில்லை.

starlink
starlinkreuters
elon musk
காங்கோ TO கென்யா.. எல்லை தாண்டி பயணித்த கொடூர வைரஸ்.. உலக நாடுகளுக்கு அடுத்த அச்சுறுத்தலா?

இந்திய அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்டத்திற்கு இணங்கியும், தேவைகளை பூர்த்தி செய்தும், இதுவரை இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. அம்பானி தான் இந்தியாவின் உண்மையான முதலாளியா? என, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு வெளியிட்ட பதிவுகளில், அம்பானியின் பெயரை குறிப்பிடாமல், விமர்சனங்களை முன்வைத்த எலான் மஸ்க், இந்த முறை நேரடியாகவே அவரை விமர்சித்துள்ளார். மேலும், பாஜக அரசின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பது, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஸ்டார்லிங்க் இணையசேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர, இந்திய அரசு நீண்ட நாட்களாக தயக்கம் காட்டி வருகிறது.

ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் நேரடியாக விண்வெளியில் இருந்து வழங்கப்படுகின்றன. எனவே, அவசரக் காலங்களில் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும்போது, இந்திய பாதுகாப்பு அமைப்புகளால், இந்த தரவுகளை எளிதாக கண்காணிக்க முடியாது என்று, அரசு சார்பில் கூறப்படுகிறது. மேலும், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின்போது, வெளிநாட்டு செயற்கைக்கோள் தொலைபேசிகளை தான், தீவிரவாதிகள் பயன்படுத்தினார்கள். எனவே, அதுபோன்ற கட்டுப்பாடற்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அனுமதிப்பதில், இந்தியா கடுமையான விதிகளை பின்பற்றுவதாகவும் சொல்லப்படுகிறது.

elon musk
இந்தியாவுக்கு ஆபத்து வருதா? எதிராக மாறும் ஹவுதி! பாகிஸ்தானுடன் புதிய கூட்டணியா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com