இந்தியாவுக்கு ஆபத்து வருதா? எதிராக மாறும் ஹவுதி! பாகிஸ்தானுடன் புதிய கூட்டணியா?
ஏமனின் ஹவுதி அமைப்பு, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவுக்கு எதிராக பாகிஸ்தான், துருக்கி நாடுகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
செய்தியாளர் - கார்த்திகேயன்
சவுதி அரேபியாவுக்கும், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, வரலாற்று ரீதியாக நீண்ட பகை இருந்து வருகிறது. இந்த பகை, தற்போது ஈரான் - அமெரிக்க போரின் காரணமாக, இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக இருப்பதால், சவுதி அரேபியாவின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்கள் மீது, ஈரானின் ஆதரவு அமைப்பான ஹவுதி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக, சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற, Dawn of Yemen என்ற ஏமான் அரசு படையினர், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது எதிர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களை தாக்குதவதற்கு, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள், சவுதி அரேபியாவுக்கு உதவி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஹவுதி அமைப்பின் உயர் தலைவர்களில் ஒருவரான அப்துல் வாஹித் அபு ராஸ், சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியா குறித்து அவர் தெரிவித்த கருத்து, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்த மோதல் விவகாரத்தில், தங்களது ஆதரவு பாகிஸ்தானுக்கு தான் என்று, அப்துல் வாஹித் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடு மிகவும் நியாயமானவை என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அப்துல் வாஹித், தங்களுடன் நடக்கும் போரில், பாகிஸ்தானை, துருக்கியையும் சிக்க வைக்க சவுதி அரேபியா முயல்வதாகவும், சவுதி அரேபியாவின் இந்த யுக்திக்கு அந்த நாடுகள் பலியாகக் கூடாது என்றும், தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானை ஒரு இஸ்லாமிய நட்பு நாடாக தான் ஹவுதி பார்க்கிறது என்றும், அந்த நேர்காணலில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அப்துல் ஹாஹித் கூறிய கருத்துகள், இந்தியாவில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தங்களது எதிர்ப்பை இந்திய அரசு பதிவு செய்யுமா? அல்லது இதற்கு என்ன எதிர்விணையை மத்திய அரசு ஆற்றப் போகிறது என்ற கேள்வியை, இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. ஒருவேளை, எதிர்காலத்தில் பாகிஸ்தான் ஹவுதியுடன் கூட்டணி வைத்தால், இருதரப்பும் ஒன்றிணைந்து, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தவும் வாய்ப்பு உள்ளதால், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

