\
A deadly ebola virus that crossed the border from Congo to Kenya
Ebola virus SpreadReuters

காங்கோ TO கென்யா.. எல்லை தாண்டி பயணித்த கொடூர வைரஸ்.. உலக நாடுகளுக்கு அடுத்த அச்சுறுத்தலா?

கொரோனாவைத் தொடர்ந்து அடுத்த வைரஸ் ஒன்று உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, சுனாமி வேகத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக 90% நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.

Reuters

அதன் பின்னர் உலக நாடுகள் ஒற்றுமையாக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக தற்போது உலகமே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்த சூழலில் ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசு (DR Congo) மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது

மே 2026-இல் தொடங்கிய இந்த எபோலா தொற்று காரணமாக, இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் காங்கோ அரசு தெரிவித்துள்ளது. இது காங்கோ வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பதிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Reuters

இந்த நிலையில், இந்த வைரல் தற்போது காங்கோவின் அண்டை நாடான கென்யாவுக்குள் நுழைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவருக்கு நடத்திய சோதனையில், அவருக்கு எபோலா தொற்று இருந்ததும், அவர் காங்கோவில் இருந்து எல்லை கடந்து கென்யாவிற்கு வந்ததும் உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த கென்யா அரசு, உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு, அவர்களை மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தியுள்ளது. மேலும் நைரோபி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கோ எல்லைப் பகுதிகளில் நுழையும் அனைத்துப் பயணிகளுக்கும் காய்ச்சல் மற்றும் உடல்வெப்பப் பரிசோதனைகளை கட்டாயமாகியுள்ளது. எபோலாவின் தீவிர பாதிப்பு காரணமாக இந்த வைரஸ் பரவலை கடந்த மே மாதமே உலகளாவிய சுகாதார அவசரநிலையாக WHO அமைப்பு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

A deadly ebola virus that crossed the border from Congo to Kenya
நம்பினால் இதுதான் கதி.. உக்ரைனின் முதுகில் குத்திய அமெரிக்கா.. நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com