\
Elon Musk and Shivon Zilis split, staying great parents.
Elon Musk and Shivon ZilisReuters

காதலியைப் பிரிந்த எலான் மஸ்க்! “இனி சிறந்த பெற்றோர்களாக இருப்போம்” உருக்கமாக பதிவிட்ட ஷிவோன்!

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் காதல் வாழ்க்கையில் தற்போது புதிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் , நியூராலிங்க் நிறுவனத்தின் நிர்வாகியுமான ஷிவோன் ஸிலிஸை பல ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஷிவோன் ஸிலிஸை தனது காதலி என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து, தனது இணையாகவே எலான் மஸ்க் சில நேரங்களில் குறிப்பிட்டு வந்துள்ளார் சமீபத்தில் கூட ஒரு பேட்டியின்போது, “நீங்கள் இனவெறியை ஆதரிப்பவரா என எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனது இணை பாதி இந்தியர். எனக்கும் அவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது குழந்தைகளில் ஒருவருக்கு பிரபல இந்திய இயற்பியலாளரான சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக ‘சேகர்’ எனப் பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ELON MUSK
ELON MUSKREUTERS

எலான் மஸ்க் குறிப்பிட்ட ஷிவோன் ஸிலிஸ், கனடாவில் பிறந்தவர் என்றாலும், அவரது தாய் இந்தியாவின் பஞ்சாப் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்தப் பேட்டியில் ஷிவோன் ஸிலிஸ் குறித்து எலான் மஸ்க் பேசியது அப்போது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

இந்நிலையில், தங்களது உறவை எலான் மஸ்க் முடித்துக்கொண்டதாக ஷிவோன் ஸிலிஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Elon Musk and Shivon Zilis split, staying great parents.
உ.பி | சாதியைக் காரணம் காட்டி சிகிச்சைக்கு அனுமதி மறுப்பு.. சாலையில் நடந்த பிரசவம்!!

அந்தப் பதிவில், “காதலிப்பதில் இருந்து... ஒரு வாரத்திலேயே எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரிவை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது” என ஷிவோன் ஸிலிஸ் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், எலான் மஸ்க் மீது தனக்கு இன்னும் அக்கறை இருப்பதாகவும், அவரது மகிழ்ச்சிக்காக எப்போதும் வாழ்த்துவேன் என்றும் ஷிவோன் ஸிலிஸ் தெரிவித்துள்ளார். ஆனால்... இந்தப் பதிவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பது, தங்களது குழந்தைகள் குறித்து ஷிவோன் ஸிலிஸ் தெரிவித்துள்ள கருத்துதான்.

எலான் மஸ்க்குடன் தங்களுக்கு 4 குழந்தைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஷிவோன் ஸிலிஸ், அந்தக் குழந்தைகளுக்காக தான் மிகவும் நன்றியுடன் இருப்பதாகவும், அவர்கள் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் இனி நல்ல நண்பர்களாகவும், சிறந்த பெற்றோர்களாகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் மற்றும் ஷிவோன் ஸிலிஸ் ஆகியோரின் உறவு பொதுவெளியில் அதிகம் பேசப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஷிவோன் ஸிலிஸ் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையில், எலான் மஸ்க் இதுவரை இந்தப் பிரிவு குறித்து பொதுவெளியில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Elon Musk and Shivon Zilis split, staying great parents.
AI-யால் வந்த வினை! அரசையே அதிரவைத்த சம்பவம்! சிறைக்குச் செல்லும் நபர்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com