\
Dalit Woman Denied Hospital Admission, Gives Birth on Road
சாலையில் பிரசவம்X

உ.பி | சாதியைக் காரணம் காட்டி சிகிச்சைக்கு அனுமதி மறுப்பு.. சாலையில் நடந்த பிரசவம்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதியைக் காரணம் காட்டி பட்டியல் இன பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on: 

உத்தரப்பிரதேச மாநிலம் ப‌தோஹி மாவட்டத்தில், பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற 20 வயது பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஷார் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராணி என்ற அந்தப் பெண், பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி ஞான்பூரில் உள்ள மகாராஜா சேத் சிங் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அவரது சமூகத்தை அடையாளம் கண்ட பின்னர், அவரை அனுமதிக்க மறுத்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரஜேஷ் பதக்
பிரஜேஷ் பதக்ANI

மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோது ராணியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்திலேயே அவரது குடும்பத்தினர் உதவியுடன் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர், தாயையும், பிறந்த குழந்தையையும் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

Dalit Woman Denied Hospital Admission, Gives Birth on Road
மணிக்கு 100 கி.மீ. வேகம்.. வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா.. திகைத்து நின்ற உலக நாடுகள்!

நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில், பணியில் இருந்த அவசர மருத்துவ அதிகாரி டாக்டர் பங்கஜ், பெண்ணை முறையாகப் பரிசோதிக்காமல் வேறு இடத்துக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெண்ணை ஏற்க மறுத்ததாகக் கூறப்படும் செவிலியர் நீலம் மவுரியா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகப்பேறு மருத்துவர் டாக்டர் முகேஷ் பிரஜாபதியின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்ட மேலும் சில மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சாலையில் பிரசவம்
சாலையில் பிரசவம்X

சாதி அடிப்படையில் சிகிச்சை மறுக்கப்பட்டதாக குடும்பத்தினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தனியாக விசாரணைக்கு உரியது என்ற நிலையில், அதிகாரப்பூர்வ விசாரணையில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Dalit Woman Denied Hospital Admission, Gives Birth on Road
மெல்லும் புகையிலையின் மையப்புள்ளியாகத் தெற்காசியா.. இந்தியாவில் பாதிப்பு அதிகம்: லான்செட்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com