\
volcano
volcano Reuters

திறக்கப்படுகிறதா நரகத்தின் வாய்? கொடூரத்துக்கு காத்திருக்கும் எரிமலை? ஆபத்தில் 20 லட்சம் மக்கள்?

நரகத்தின் வாய் என்று சொல்லக் கூடிய எரிமலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published on: 
Summary

மசயா எரிமலையின் கீழ் இரண்டு மாக்மா அறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியாத சிக்கல் உருவாகியுள்ளது. 20 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில், எதிர்கால அபாயங்களைத் தடுக்க புவியியல் ஆய்வுகள் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

2026-ஆம் ஆண்டில் பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு, பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. பெரிதும் அரிதாகவே ஏற்படும் எரிமலை சீற்றங்கள் கூட, இந்த ஆண்டு பெருமளவில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்தோனேசியாவின் அனக் கிரக்கட்டாவா, மராபி, மெராபி ஆகிய எரிமலைகளும், பிலிப்பைன்ஸின் தால் எரிமலையும், அமெரிக்காவின் கிரேட் சிட்கின் எரிமலையும் வெடித்து சிதறியுள்ளன. மேலும், பெரு, கொலம்பியா நாடுகளிலும், கடந்த மாதம் எரிமலைகள் வெடித்து, பொதுமக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து இருந்தன.

இப்படியான சூழ்நிலையில், நரகத்தின் வாய் என்று சொல்லக் கூடிய மசயா எரிமலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நிகரகுவா நாட்டில் உள்ள மசயா எரிமலை குறித்து, பென்சில்வேனியா மாநில பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள், ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்த எரிமலையின் அடியில், இரண்டு தனித்தனி மாக்மா அறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாக்மா அறைகளும், வெவ்வேறு மாதிரி செயல்படுகின்றன. கீழே உள்ள அறைக்கு எரிமலை குழம்பு வந்து கொண்டிருப்பதால், தரை மேல் எழும்புகிறது. ஆனால், மேலே உள்ள அறை சுருங்குகிறது.

volcano
volcanoReuters
volcano
இந்தியாவுக்கு ஆபத்து வருதா? எதிராக மாறும் ஹவுதி! பாகிஸ்தானுடன் புதிய கூட்டணியா?

இது எரிமலையின் ஆபத்தான மற்றும் சிக்கலான தன்மையைக் காட்டுகிறது. வழக்கமான எரிமலைகளில், ஒரேயொரு அறை இருப்பதால், அது எப்போது வெடிக்கும்? என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். ஆனால், இந்த எரிமலைக்கு இரு மாக்மா அறைகள் இருப்பதால், எது எப்போது வெடிக்கும் என்பதை கண்டறிவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. மேலும், ஆழமான அறையில் மாக்மா வேகமாக நிரம்பும்போது, அது மேலிருக்கும் சிறிய அறையைத் திடீரெனத் தள்ளினால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பெரிய அளவில் எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளது.

இந்த பகுதியை சுற்றி, 20 லட்சம் மக்கள் வசித்து வருவதால், இந்த ஆய்வு முடிவுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எரிமலையால், மக்களுக்கு எந்தவொரு உடனடி ஆபத்துகளும் தற்போது இல்லை. ஆனால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் முன்கூட்டியே கணிக்கவும், பாதுகாப்பான கண்காணிப்பு முறைகளை மேம்படுத்தவும் இந்த நீண்டகால புவியியல் ஆய்வுகள் மிகவும் அவசியமானவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

volcano
அம்பானி தான் முதலாளியா? நேரடியாக தாக்கிய எலான் மஸ்க்! பாஜக அரசுக்கு கேள்வி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com