donlad trump
donlad trumpx page

அமெரிக்காவில் முதன்முறை.. ட்ரம்பின் பதவியேற்பு விழாவுக்கு போட்டிபோட்டு நிதி கொடுக்கும் பணக்காரர்கள்!

டொனால்டு ட்ரம்ப் பதவியேற்புக்கான நிதி சேகரிப்பு தற்போது அதன் இலக்கான டாலர் 150 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. மேலும் இது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். இதையடுத்து தனது அமைச்சகத்தில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள், அதிகாரிகளை அவர் நியமித்து வருகிறார். மேலும், பதவியேற்பதற்கு முன்பாக பல்வேறு திட்ட அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறார். குடியேற்றக் கொள்கை, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வரிவிதிப்பு, பனாமா கால்வாய், பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எச்சரிக்கை உள்ளிட்டவை அதில் அடக்கம்.

donald trumps inaugural fund set to break record as usa
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அவருடைய பதவியேற்புக்கான நிகழ்வுகள் வேகம்பிடித்து வருகின்றன. அதன்படி, ட்ரம்பின் இந்தப் பதவியேற்பு நிதி சேகரிப்பு ஒரு புதிய சாதனையைப் படைக்க இருக்கிறது. அவருடைய பதவியேற்பு நிகழ்வுக்காக அமெரிக்கா பணக்காரர்கள் பலரும் போட்டி போட்டு நிதி வழங்கி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹமலா ஹாரிஸுக்கு நிதி வழங்கியவர்கள்கூட, தற்போது ட்ரம்பை நண்பராக ஏற்று அவருக்கு நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அவருடைய பதவியேற்புக்கான நிதி சேகரிப்பு தற்போது அதன் இலக்கான டாலர் 150 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. மேலும் இது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அமெரிக்க வரலாற்றில் சாதனை படைக்கும் வகையில் உள்ளது.

donlad trump
அவதூறு வழக்கு | ஏபிசி நியூஸ் - ட்ரம்ப் சமரசம்.. ரூ.127 கோடி வழங்க ஒப்புதல்!

முன்னதாக, ட்ரம்பின் முதல் பதவியேற்பு விழா (2017) அதிகபட்சமாக டாலர் 107 மில்லியன் நிதியைப் பெற்று சாதனையைப் படைத்தது. அதைத் தொடர்ந்து ஜோ பைடனின் 2021 பதவியேற்பு விழா டாலர் 63 மில்லியனையும், பராக் ஒபாமாவின் 2009 பதவியேற்பு விழா டாலர் 53 மில்லியனையும், 2013ஆம் ஆண்டு பதவியேற்பு விழா டாலர் 42 மில்லியனாகவும் வசூலாகி இருந்தது. தற்போது, இந்தச் சாதனைகள் தகர்ப்பட இருக்கிறது.

donald trumps inaugural fund set to break record as usa
ட்ரம்ப், ஜோ பைடன்எக்ஸ் தளம்

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், "டஜன் கணக்கான அமெரிக்க நிறுவனங்கள் இப்போது டொனால்டு ட்ரம்பின் பதவியேற்புக்கு நிதியளிக்க வரிசையில் நிற்கின்றன” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கமலா ஹாரிஸை பெரிதும் ஆதரித்த வோல் ஸ்ட்ரீட் மற்றும் கார்ப்பரேட் அமெரிக்கா, இப்போது வரவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புடன் களமிறங்க முயல்கின்றன. பல வணிகத் தலைவர்கள் அவரது பதவியேற்பு குழுவிற்கு பெரும் பணத்தை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளனர்.

donlad trump
பனாமா கால்வாயை ஏன் குறிவைக்கிறார் ட்ரம்ப்.. பின்னணியில் சீனா இருக்கிறதா? நடப்பது என்ன?

தி கார்டியனின் அறிக்கையின்படி, ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஜெஃப் பெசோஸின் அமேசான் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா ஆகியோர் தலா டாலர் 1 மில்லியன் வழங்க உறுதியளித்துள்ளனர். மேலும் Uber மற்றும் அதன் CEO Dara Khosrowshahi, ஆட்டோமொபைல் ஜாம்பவான்களான டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகியவையும் தலா 1 மில்லியன் டாலர்களை வழங்க இருக்கின்றன.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஹெட்ஜ்-நிதி மேலாளர் கென் கிரிஃபினும் டாலர் 1 மில்லியன் நன்கொடை அளிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், கோல்ட்மேன் சாக்ஸ், பாங்க் ஆஃப் அமெரிக்கா, ஏடி&டி மற்றும் ஸ்டான்லி பிளாக் & டெக்கர் ஆகியவை அடங்கும். இதில், Goldman Sachs, Intuit, Toyota மற்றும் PhRMA ஆகியன பதவியேற்பு நிதியை அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

donald trumps inaugural fund set to break record as usa
ட்ரம்ப், மெலனியாஎக்ஸ் தளம்

ஜர்னல் அறிக்கையின்படி, ட்ரம்பின் பதவியேற்பிற்காக டாலர் 1 மில்லியன் அல்லது டாலர் 2 மில்லியன் அளிக்கும் நிறுவனங்கள், பதவியேற்பு விழாவிற்கு முந்தைய தொடர் நிகழ்வுகளுக்கு ஆறு டிக்கெட்டுகளைப் பெற உள்ளன.

donlad trump
அமெரிக்கா | ’எலான் மஸ்க் அதிபர் ஆவாரா?’ நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்.. சொன்ன காரணம் இதுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com