டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்எக்ஸ் தளம்

அவதூறு வழக்கு | ஏபிசி நியூஸ் - ட்ரம்ப் சமரசம்.. ரூ.127 கோடி வழங்க ஒப்புதல்!

டொனால்டு ட்ரம்ப் தொடுத்த அவதூறு வழக்கை கைவிட, அவரின் அதிபா் ஆவண காப்பகத்துக்கு 15 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.127 கோடி) வழங்க ஏபிசி நியூஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப், ஜன.20ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். இந்த நிலையில், தன்னிடம் பாலியல் ரீதியில் டொனால்டு ட்ரம்ப் தவறாக நடந்துகொண்டதாக, கடந்த ஆண்டு நியூயாா்க் நீதிமன்றத்தில் எழுத்தாளா் எலிசபெத் ஜீன் கரோல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

இந்த வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீா்ப்பில் அவா் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ‘ட்ரம்ப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீா்ப்பளித்தது’ என்று கடந்த மாா்ச் மாதம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏபிசி ஊடகத்தைச் சேர்ந்த நெறியாளா் ஜாா்ஜ் ஸ்டெஃபனாபோலஸ் தவறான தகவலை தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து தெற்கு ஃபுளோரிடா நீதிமன்றத்தில் ஜாா்ஜ் மற்றும் ஏபிசி நியூஸ் மீது ட்ரம்ப் அவதூறு வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பேரையும் அடுத்த வாரம் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த வழக்கில் ட்ரம்ப்புக்கும், ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை கைவிட ட்ரம்பின் ஆவணக் காப்பகத்துக்கு 15 மில்லியன் டாலா்களையும், வழக்கு கட்டணமாக 1 மில்லியன் டாலா்களையும் வழங்கி, பொது மன்னிப்பை வெளியிட அந்தத் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இருதரப்பினா் இடையே கையொப்பமானது. இதையடுத்து, இந்த வழக்கு விரைவில் வாபஸ் பெறப்படும் எனக் கூறப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப்
ஒரே பதிவில் கவர்னர் ஆன கனடா பிரதமர்.. டொனால்டு ட்ரம்ப் செய்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com