கோவிஷீல்டு பக்கவிளைவு விவகாரம் | “10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே ரத்த உறைவு அபாயம்”

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
 ஐசிஎம்ஆர் விஞ்ஞானி
ஐசிஎம்ஆர் விஞ்ஞானி முகநூல்

அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், பக்கவிளைவுகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகளின் விசாரணையின்போது, கோவிஷீல்டை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், “எங்கள் நிறுவன கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்” என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தது. இது உலகம் முழுக்க மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

 ஐசிஎம்ஆர் விஞ்ஞானி
“கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும்” - நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா ஒப்புதல்!

இந்நிலையில்,

கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்

என்று ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நீங்கள் முதல் டோஸைப் பெறும்போது ஆபத்து அதிகமாக இருக்கும். ஆனால் அது இரண்டாவது டோஸில் குறைகிறது. அதுவே மூன்றாவது டோஸில் மிகவும் குறைவாக இருக்கும். இதையும் மீறி பக்கவிளைவு ஏற்பட்டால், அது ஆரம்ப காலக்கட்டத்தில் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் தெரிந்துவிடும்.

Former ICMR Scientist Gangakhedkar
Former ICMR Scientist Gangakhedkar

மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனாவால் நாட்டில் ஏராளமான உயிர்களின் போனது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. லட்சகணக்கான உயிர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அதை குறைக்க உதவியது இந்த தடுப்பூசிகள்தான். எனவே தடுப்பூசிகளில் இருக்கும் நேர்மறையான தாக்கத்தை கருத்தில் கொள்ளும் போது , அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து குறைவாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதுவும் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

 ஐசிஎம்ஆர் விஞ்ஞானி
தேசிய தடுப்பூசி தினம் - வரலாறும் முக்கியத்துவமும்!

இதற்கிடையே ‘இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா’ என ஆய்வுசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஷால் திவாரி என்பவர், “இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான டோஸ் கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் கொரோனா காலத்துக்குப்பின் மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்கிறது. குறிப்பாக சிறிய வயதினரின் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

 ஐசிஎம்ஆர் விஞ்ஞானி
கொரோனா பாதிப்பிற்கு பின் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

இப்படியிருக்க அந்நிறுவனம் தங்கள் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமென ஒப்புக்கொண்டுள்ளது. ‘இவை அனைத்துக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பிருக்குமோ’ என்ற அச்சத்தை மனதில் கொள்ளும்படி, மக்களாகிய எங்களை நிர்ப்பந்திக்கிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

ஆகவே எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மூலமாக, அவர்களின் இயக்குநர் வழிகாட்டுதலோடு கோவிஷீல்டு தடுப்பூசி மீது இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். அத்தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படுகிறதா என ஆராய வேண்டும். உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com