“கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும்” - நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா ஒப்புதல்!

கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் அதை தயாரித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா
அஸ்ட்ராஜெனெகாமுகநூல்

கோவிஷீல்டை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தங்கள் நிறுவன கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய நிலையில் அதில் கொத்துக்கொத்தாக மாண்ட உயிர்கள் ஏராளம். அச்சமயத்தில் உயிரிழப்புகளை தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

அந்தவகையில் அஸ்ட்ராஜெனெகா (ASTRAZENECA) நிறுவனமும், ஆக்ஸ்போர்டு (OXFORD) பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியானது வக்ஸ்செவ்ரியா, கோவிஷீல்டு என்று பல்வேறு பெயர்களில், இந்தியா உட்பட பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்தச் சூழலில், பிரிட்டனில் மட்டும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்ட ஈடுகோரி மக்கள் மனு அளித்திருந்தனர்.

இவ்வழக்கின் முதல் மனுதாரரான ஜேமி ஸ்காட் என்பவர் கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் பின் தனக்கு ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்பட்டது என்று தெரிவித்து வழக்கு தொடுத்திருந்தார். அதில், “ரத்த உறையாமை ஏற்பட்டு எனக்கு நிரந்தர மூளை பாதிப்பு ஏற்பட்டது. நான் இறந்துவிடுவேன் என்று என் மனைவியிடம் மருத்துவ நிர்வாகம் கிட்டத்தட்ட மூன்று முறை கூறியது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராஜெனெகா
தாங்க இயலாத வாகன இரைச்சல் இதயத்திற்கு ஆபத்தாக முடியலாம்! - மருத்துவஆய்வு விடுக்கும் எச்சரிக்கை என்ன?

ஆனால், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தொடர்ந்து இதனை மறுத்துவந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அளித்த ஒரு ஆவணத்தில் மட்டும், “கோவிஷீல்டு தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு, TTS எனப்படும் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இது ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து துல்லியமாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா
கோடைக்காலத்தில் இத்தனை நோய்கள் வருமா! குழந்தை வளர்க்கும் தாய்மார்களே உங்களுக்குத்தான் இந்த வீடியோ!

இந்நிலையில் ஜேமி ஸ்காட்டின் வழக்கறிஞர் இது குறித்து தெரிவிக்கையில், “கடந்த 2023 ஆம் ஆண்டு அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்தான் கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது இதற்கு முரணாக தெரிவித்துள்ளது” என்று சுட்டிகாட்டியுள்ளார்.

இதையடுத்து இவ்விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் “எனவே நான் சொன்னது சரிதான். கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனமே கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிய டிடிஎஸ் எனப்படும் பக்கவிளைவினை ஏற்படுத்தும் என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது” என்று ஆங்கிய செய்தி நிறுவனத்தின் கட்டுரையை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களிடையே இந்த செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com