2 US jets 2 helicopters by Iran in last 24 hours as war spirals
ஈரான்எக்ஸ் தளம்

’சும்மா அதிருதுல்ல..’ 2 விமானம்.. 2 ஹெலிகாப்டர் குளோஸ்.. ஒரே நாளில் அமெரிக்காவை அலறவிட்ட ஈரான்!

ஒரு மாதத்தைக் கடந்துள்ள போரில், இது, அமெரிக்காவுக்கு நெருக்கடி நிலவுவதைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
Published on

ஈரானின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ஒரு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நேற்று ஈரான் அறிவித்திருந்தது. மேலும், அதன் விமானி ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரின் நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஈரானை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து சிதைத்து வரும் நிலையில், ஈரானோ அதற்கேற்றதுபோல் மத்திய கிழக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரினால், ஈரான் அதிக அளவில் உயிரிழப்புகளையும், சேதங்களையும் சந்தித்துள்ளது. எனினும், தன்னுடைய தாக்குதல்களால் அவ்வப்போது அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தியிருக்கும் ஈரான், 2 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

ஈரானின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ஒரு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நேற்று ஈரான் அறிவித்திருந்தது. மேலும், அதன் விமானி ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரின் நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அமெரிக்காவின் ஏ-10 வார்ஹாக் தாக்குதல் விமானம் ஒன்று குவைத்தின் நொறுங்கி விழுந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. அதிலிருந்த விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்றும், பின்னர் அவர் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 US jets 2 helicopters by Iran in last 24 hours as war spirals
6 லட்சம் பேரல்.. இந்தியா வர வேண்டிய எண்ணெய் கப்பல்.. திசை மாறி சீனா நோக்கி பயணம்!

தவிர, மற்றொரு ஏ-10 வார்ஹாக் விமானம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. அது, ஒற்றை எஞ்சினுடன் தட்டுத்தடுமாறி மீண்டும் தளத்திற்குத் திரும்பியதாகத் தெரிவித்துள்ளது. இவை தவிர, இந்த மீட்புப் பணிகளின்போது இரண்டு HH-60W ஜாலி கிரீன் II ஹெலிகாப்டர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. சேதமடைந்த அந்த ஹெலிகாப்டரிலிருந்த விமானிகள் தப்பித்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த 4 விபத்துகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒரு எஃப்-16 விமானம் அவசரமாகத் தரையிறங்கியதாகவும், இரண்டு கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானங்களும் அவசரநிலையை அறிவித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தைக் கடந்துள்ள போரில், இது, அமெரிக்காவுக்கு நெருக்கடி நிலவுவதைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், பென்டகனும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவும் விபத்துக்குள்ளான விமானம் குறித்து விரிவான பொது அறிக்கைகளை வெளியிடவில்லை. ஏற்கெனவே, அமெரிக்காவின் இரண்டு விமானங்களையும், ஒரு கப்பலையும் வீழ்த்தியிருந்ததாக ஈரான் வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2 US jets 2 helicopters by Iran in last 24 hours as war spirals
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி? F-18 விமானம் மீது மீண்டும் தாக்குதல்.. ஆதாரத்தை வெளியிட்ட ஈரான்!

இந்த தாக்குதல் குறித்து ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ”போர் ஆட்சி மாற்றத்திலிருந்து அமெரிக்க விமானிகளை வேட்டையாடும் நிலைக்கு மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், ”இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தபோதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கப்படாது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்எக்ஸ் தளம்

இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஈரான் நிராகரித்திருப்பதும், அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதிருப்பதும், காணாமல் போன விமானியைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டிருப்பதும் போரில் முக்கியமான தருணத்தைக் கொண்டுள்ளன. இதனால், போர் மேலும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

2 US jets 2 helicopters by Iran in last 24 hours as war spirals
அமெரிக்காவின் 5-ம் தலைமுறை போர் விமானம் மீது தாக்குதல்.. ஈரானுக்கு மிகப்பெரிய வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com