18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தம்பதி!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - சோபி கிரிகோயர் தம்பதி தங்களது திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
justin trudeau, sophie
justin trudeau, sophiept web

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரது மனைவி சோபி கிரிகோயர் தம்பதி 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 15, 14 மற்றும் 9 வயதுகளில் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடரபாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பதிவில், பல்வேறு கடினமான உரையாடல்களுக்குப் பின் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், "நீண்ட ஆலோசனைக்கு பின் நானும் சோபியும் பிரிய முடிவு செய்துள்ளோம். எங்களது குழந்தைகளின் தனி உரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஜஸ்டின் மற்றும் சோபி இருவரும் சட்டப்பூர்வமாக பிரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தங்களது குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளப்பதற்கு இருவரும் கவனம் செலுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவார்கள் என்றும் அவர்கள் அடுத்த வாரம் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மனைவியை பிரிவதாக அறிவித்த பிரதமர்களில் இரண்டாவது நபர் ஜஸ்டின் ட்ரூடோ. முன்னதாக ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் எலியட் ட்ரூடோ அவரது தாயார் மார்கரெட் தம்பதி 1979 ஆம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com