\
canada has prepared for US attacks
Model ImageGoogle Gemeni

100 ஆண்டுகளில் முதன்முறை.. தாலிபன் பாணியில் கொரில்லா தாக்குதல்.. US-வை எதிர்கொள்ளத் தயாராகும் கனடா!

கடந்த நூறு ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவின் ஆயுதப் படைகள், தனது நாட்டின் மிக முக்கிய நட்பு நாடான அமெரிக்காவையே ஒரு சாத்தியமான எதிரியாக கருதி போர் மாதிரிகளை திட்டமிட்டு மதிப்பீடு செய்து வருகின்றன.
Published on: 
Summary

அமெரிக்கா - கனடா இடையே உறவு விரிசலடைந்து வரும் நிலையில். அமெரிக்கா ஒருவேளை கனடாவின் மீது ராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கனடா ரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உலகம் முழுவதும் வரி விதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதை, மீண்டும் 50% வரை உயர்த்தினார். மேலும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றுவது பற்றியும், பொருளாதாரரீதியாக நெருக்கடி தருவதும் அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையாக இருக்கிறது. எனினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, கனடாவும் வரிகளை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் விரிசல் அடைந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா ஒருவேளை கனடாவின் மீது ராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கனடா ரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், வழக்கமான ராணுவப் பலத்தில் அமெரிக்காவைவிட கனடா சிறிய படைப் பலத்தைக் கொண்டுள்ளது.

அந்த வகையில், கனடா நாட்டின் முதன்மைச் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, 'ஆக்கிரமிப்பு போன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டால் நேருக்கு நேர் போரிட முடியாது என்பதால், ட்ரோன் தாக்குதல்கள், சிறிய தற்காப்புக் குழுக்கள் மற்றும் முடக்கும் நடவடிக்கைகள் போன்ற மறைமுகக் கொரில்லா தற்காப்பு உத்திகளையே பயன்படுத்த முடியும்' எனக் கூறப்பட்டுள்ளது.

canada has prepared for US attacks
100 ஆண்டுகளில் இல்லாத மழை.. தத்தளிக்கும் கனடா.. தொடரும் மீட்புப் பணி!!

அதாவது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் கையாண்ட கொரில்லா முறை, ட்ரோன் தாக்குதல்கள், மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் சதிச்செயல்கள் போன்ற மாற்றுப் போர் முறைகளைப் பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது. இது, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் அல்ல; மாறாக, ஒரு சாத்தியமற்ற தீவிரச் சூழலில் கனடா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு உத்திகளை ஆராயும் பயிற்சியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், கடந்த நூறு ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவின் ஆயுதப் படைகள், தனது நாட்டின் மிக முக்கிய நட்பு நாடான அமெரிக்காவையே ஒரு சாத்தியமான எதிரியாக கருதி போர் மாதிரிகளை திட்டமிட்டு மதிப்பீடு செய்து வருகின்றன.

கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா ராணுவ ரீதியாக கனடாவை ஆக்கிரமிக்கும் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவுதான் என்றபோதிலும், அதை தீவிர அபாயம் கொண்ட ஒரு நிகழ்வாக வகைப்படுத்தி கனடா அரசு ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், கனடா ராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜென்னி கரிக்னான் சுமார் 4,00,000 நபர்கள் கொண்ட மிகப்பெரிய தன்னார்வப் பாதுகாப்புப் படையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

canada has prepared for US attacks
US, கனடா வேண்டாம்.. 86,000 கிலோ தங்கத்திற்காக பிரிட்டனை தேர்வுசெய்த நெதர்லாந்து!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com