\
Epstein Files: Houthis Use New Weapon Against Saudi Arabia
KaabaReuters

இஸ்லாத்திற்கு எதிரி? எப்ஸ்டீன் கோப்புகளை கையிலெடுத்த ஹவுதி.. சவுதிக்கு எதிரான புதிய திட்டம்!

எஃப்ஸ்டீன் கோப்புகளை சவுதி அரேபியாவுக்கு எதிரான ஒரு ஆயுதமாக ஹவுதி தற்போது மாற்றியிருக்கிறது.
Published on: 

சவுதி அரேபியா மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வரும் ஈரான் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படை, அந்நாட்டிற்கு எதிராக எப்ஸ்டீன் கோப்புகளை புதிய ஆயுதமாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தங்களை இஸ்லாத்தின் பாதுகாவலர்களாகவும், சவுதியை அதன் கொள்கைகளுக்கு எதிரானதாகவும் ஹவுதி சித்தரித்து வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியும், தொழிலதிபருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்கள், தற்போது சவுதி அரேபியா மற்றும் ஹவுதி இடையேயான மோதலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த ஆவணங்களில், சவுதி அரச குடும்பத்துடன் தொடர்புடைய நபர்கள், இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் உள்ள கஃபாவை (Kaaba) அலங்கரித்த துணி விரிப்புகளை எப்ஸ்டீனின் தனித் தீவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

எப்ஸ்டீன்
எப்ஸ்டீன்Reuters

இந்தத் தகவல்களைத் தான், ஹவுதிகள் தற்போது சவுதி அரேபியாவின் மத நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய மதத்தின் புனிதத் தலங்களைக் காப்பதில் சவுதி அரேபியா உண்மையாகச் செயல்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், ஹவுதிகள் தங்களது பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சமூக வலைதளப் பதிவுகள், காணொளிகள், பாடல்கள், அரசியல் உரைகள் மற்றும் இணையப் பிரபலங்கள் வாயிலாக இந்தக் கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Epstein Files: Houthis Use New Weapon Against Saudi Arabia
100 கி.மீ அசுர காற்று.. ஆஸ்டன் புயல் செய்யும் நாசம்.. கடும் கோபத்தில் இயற்கை!!

மேலும், ஹவுதி அமைப்பின் தலைவர் மக்தி அல்-மஷாத் (Mahdi al-Mashat), எப்ஸ்டீனுக்கு கஃபாவின் துணியை வழங்கியவர்கள்தான் குறிவைத்து மெக்காவைத் தாக்குகிறார்கள் என குற்றஞ்சாட்டியதாக அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், மெக்காவை இலக்காகக் கொண்டு ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், அதற்கு ஹவுதி படையினர் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்தச்சூழலில் தான், எஃப்ஸ்டீன் கோப்புகளை சவுதி அரேபியாவுக்கு எதிரான ஒரு ஆயுதமாக ஹவுதி தற்போது மாற்றியிருக்கிறது.

சமீபத்தில், மெக்காவில் அநாகரீக செயலில் ஈடுபட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவி 2 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த போதும், சவுதி கஃபா-வின் துணியை எப்ஸ்டீனுக்கு வழங்கியதை குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Epstein Files: Houthis Use New Weapon Against Saudi Arabia
"நாங்க தவிக்கிறோம்... ஹார்முஸை திறந்துவிடுங்கள்!” ஈரானிடம் கெஞ்சும் அமெரிக்காவின் நட்பு நாடு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com