அமெரிக்க அதிபர் தேர்தல் | மீண்டும் நேருக்கு நேர் களம்காணும் பைடன் - ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல்pt

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜார்ஜியாவில் நடந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக வேட்பாளர் தேர்வுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான 1,968 பிரதிநிதிகளின் ஆதரவை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்
'No Donation' ஆப்புவைத்த எலான் மஸ்க்; சிக்கலில் டொனால்டு ட்ரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு

இதன்மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் 2வது முறையாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

81 வயதாகும் ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்கு நேர் களம்காண இருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுகிறாரா இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com